இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான விடுதலை படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து வெளியாகி உள்ள இரண்டாம் பாக திரைப்படம் தான் விடுதலை 2. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக சூரி நடிக்க விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
சமூகப் பிரச்சனையை பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அற்புதமாக எடுத்துக் கூறும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. பெருமாள் வாத்தியார் யார் என்றே தெரியாமல் அவரை சந்திக்கும் கான்ஸ்டபிள் குமரேசன் போலீஸ் படையாலையே பிடிக்க முடியாத பெருமாள் வாத்தியாரை தனியாக ஒரு சின்ன டீமுடன் போராடி பிடித்துக் கொடுப்பதுடன் முதல் பாகம் முடிவடைந்திருக்கும்.
இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் பெருமாள் வாத்தியார் யார் ஒரு சாதாரண கூலி தொழிலாளி எப்படி புரட்சி வீரராக மாறுகிறார் என்ற கதையை வெற்றிமாறன் இயக்கிய நிலையில் 2 நாட்களுக்கு முன்பு முன்தினம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரியின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் வெளியான விடுதலை 2 திரைப்படம் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் மட்டும் உலக அளவில் 10 கோடி வசூலை குவித்தது. இந்த நிலையில் விடுதலை திரைப்படம் வெளியாகி ஆறாம் நாளான நேற்று தமிழ்நாட்டில் மட்டும் 3.18 கோடி வசூலித்து மொத்தமாக 28.68 கோடி ரூபாயும், தெலுங்கில் நேற்று ஒரே நாளில் 11 லட்சம் வசூலித்து மொத்தமாக 2.01 கோடியும் வசூலித்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து படம் வெளியான முதல் நாள் முதல் தற்போது வரை இந்திய அளவில் மட்டும் 31.85 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.