saaat

அனைவரும் எதிர்பார்த்த தருணம்… வசமாக சிக்கிய மனோஜ்- ரோகிணி… சிறகடிக்க ஆசையில் இன்று…

By admin on மார்கழி 26, 2024

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் முத்து அனைத்து உண்மைகளையும் அறிந்துகொண்டு மனோஜின் லவ்வர் ஆன ஜீவாவை எங்கள் வீட்டிற்கு வந்து உண்மையை சொல்லுங்கள் என்று கூறிவிட்டு கோபத்துடன் வீட்டுக்கு வருகிறார். வீட்டிற்கு வந்து விசாரணை செய்ய வேண்டும் என்று வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு ஹாலில் உட்கார வைக்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

   

இன்றைய எபிசோடில் முத்து எல்லாரையும் உட்கார வைத்து குற்றவாளி கூண்டில் மனோஜ் நிக்க வைப்பது போல் நிக்க வைத்தார். பிறகு அப்பா கொடுத்த பணத்தை இவன் லவ்வர் தூக்கிட்டு ஓடுனா இல்லையா நான் முதல்ல இருந்து எல்லாத்தையும் விசாரிக்கிறேன் அந்த பணம் இன்னும் திரும்ப வரல அதான் அவன் சொல்லிட்டு இருக்கான் ஆனா அந்த பணம் இவனுக்கு பல மாசத்துக்கு முன்னாடியே கையில கிடைச்சிருச்சு என்று கூறுகிறார்.

   

உடனே மனோஜ் இவனுக்கு வேலை இல்லப்பா குடிச்சிட்டு வந்து என்னமோ உளறுகிறான். ஏதேதோ கதை சொல்றான் என்று சமாளிக்கிறார். ரோகினி மனதிற்குள் எப்படியோ முத்துவிற்கு ஏதோ ஒன்று Clue கிடைச்சிருக்கு அதனாலதான் இப்படி வந்து பேசுறாரு. அவரால் இதை நிரூபிக்கவே முடியாது. நாம எப்படியாவது இந்த சூழ்நிலை சமாளிச்சரணும் என்று மனதில் நினைத்துக் கொண்ட ரோகிணி அங்கிள் இவருக்கு எப்பவுமே மனோஜை இன்சல்ட் பண்றதே வேலையா போச்சு என்று கூறுகிறார். அடுத்ததாக அண்ணாமலை எனக்கு ஒண்ணுமே புரியலடா நேரா விஷயத்துக்கு வா என்று கூறுகிறார். ரவியும் முத்துவிடம் நீ உண்மை தான் பேசுறியா என்று கேட்கிறார்.

 

ஆமாடா நான் உண்மைய தான் பேசுகிறேன். இவங்க ரெண்டு பேரும் பத்தை எப்பவோ வாங்கிட்டு நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்காங்க என்று கூறுகிறார் முத்து. உடனே ரோகிணி முத்து நாங்க பணம் வாங்குனத நீங்க பார்த்தீங்களா உங்கிட்ட என்ன சாட்சி இருக்கு என்று கேட்கிறார். உடனே முத்து இதுதான் பாயிண்ட் என்கிட்டே சாட்சி இருக்கு என்று கூறுகிறார். உடனே மனோஜூம் ரோகினியும் அதெல்லாம் இவனை நம்பாதீங்கமா இவன் யார்கிட்டயாவது பணம் கொடுத்து ஆள் செட் பண்ணி கொண்டு வந்து இருப்பான் என்று கூறுகிறார்கள்.

உடனே முத்து அதெல்லாம் உன்ன மாதிரி கிரிமினல் வேலை பார்க்கலாம் எனக்கு தெரியாது. நான் பணம் கொடுத்து ஆள கூட்டிட்டு வந்து இருக்கேன் தானே நீங்க சொன்னீங்க உங்களுக்கு பணம் கொடுத்த ஆளே வந்து இருக்கு அப்படின்னு சொல்லி ஜீவாவை உள்ளே கூப்பிடுகிறார். மனோஜும் ரோகினியும் ஆடி போய் நிற்கிறார்கள். ஜீவா வந்து அனைவரிடமும் உண்மையை கூறுகிறார். நான் பணத்தை எடுத்துட்டு போனது உண்மைதான். ஆனால் நான் போன தடவை வந்திருக்கும்போதே அவங்களுக்கு வட்டியோட சேர்த்து 30 லட்சம் கொடுத்துட்டேன். அதுக்கு உண்டான ரசீது என் பேங்க் ஸ்டேட்மெண்ட் இது என்று கூறுகிறார்.

மேலும் மனோஜ்க்கு எல்லாம் வ்வளவுதான் படிச்சிருந்தாலும் அறிவு டேலண்ட் திறமை ஒன்றுமே கிடையாது. அவங்க தான் என்ன ரோகினி தான் என்ன புடிச்சாங்க எல்லாம் பண்ணுனாங்க. முத்து நல்லவர் அவருக்காக தான் உண்மையை சொல்ல வந்தேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். அண்ணாமலை மனோஜை திட்டுகிறார். ஏன்டா நீ இன்னும் திருந்தலையா இந்த பழக்கத்தை விடலையா ஏண்டா எங்களை எல்லாம் எப்படி ஏமாத்துற உன்னை நினைச்சாலே எனக்கு வெக்கமா இருக்கு என்று கூறுகிறார்.

முத்து அந்த நேரத்தில் பணம் வாங்குனது மட்டும் நமக்கு மறைக்கலப்பா மலேசியால அவன் மாமனார் பணத்தை கொடுத்து தான் ஷோரூம் திறந்தோம்னு சொன்னது பொய் மலேசியாவில் பார்லர் அம்மாவோட அப்பா பணத்தை அனுப்பவே இல்ல உங்க பணத்தை வைத்து தான் ஷோரூமை ஆரம்பிச்சு இருக்காங்க என்று கூறுகிறார். விஜயா அதிர்ச்சியில் நின்று இருக்கிறார். அப்போது மனோஜை கூப்பிடுகிறார். ஏன்டா என்னை ஏமாத்த உனக்கு எப்படி தான் மனசு வந்தது என்று சட்டையை பிடித்து கேள்வி கேட்கிறார்.

உடனே மனோஜ் அம்மா எனக்கு எதுவும் தெரியாது அம்மா அந்த பணத்தை வைத்து ஷோரூம் வைக்கலாம் அப்படின்னு ரோகிணி தாம்மா எல்லா ஐடியாவும் கொடுத்தது என்று கூறி அப்ரூவர் ஆகி விடுகிறார். விஜயா மெல்ல ரோகினி இடம் வந்து உங்க அப்பா பணம் தந்தார்னு சொன்னது பொய்யா அப்படின்னு கன்னத்திலே ஒரு அறை விடுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. நாளை ரோகிணியை வச்சு செய்வார்கள் என்று தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.