சென்னையில் பிறந்து வளர்ந்தவர் குகேஷ் தொம்மராஜூ. இவரது தந்தை ரஜினிகாந்த் ENT அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் இவரது தாயார் பத்மா மைக்ரோ பயாலஜிஸ்ட் ஆவார். குகேஷ் தனது 7 வயதிலிருந்து செஸ் விளையாட தொடங்கி இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு குகேஷ் ஒன்பது வயதுக்கு உட்பட்ட ஆசிய பள்ளிகளின் சதுரங்க போட்டியில் வென்றார். 2018 ஆம் ஆண்டு 12 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் வெற்றி பெற்றார். அதோடு 2018 ஆம் ஆண்டு ஆசிய இளையோர் செஸ் போட்டியில் 12 வயதிற்குட்பட்டவரான தனிநபர் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றார்.
2019 ஆம் ஆண்டு குகேஷ் 12 வயதில் இருக்கும் போது வரலாற்றில் இரண்டாவது இளைய சாம்பியனாக ஆனார். 2021 ஆம் ஆண்டு யூனியஸ் பெயர் சேலஞ்ச்சர் சுற்றில் வெற்றி பெற்றார். 2022 ஆம் ஆண்டு குகேஷ் 44 ஆவது செஸ் ஒலிம்பியாடு போட்டியில் பதக்கத்தை வென்றார். 2023 ஆம் ஆண்டு தரவரிசை பட்டியலில் குகேஷ் 2750 மதிப்பீட்டை எட்டிய இளம் வீரரானார். 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையின் மூலம் வேட்பாளர் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
இதன் மூலம் பாபி பிஷேர் மாக்னஸ் கார்ல்சன் ஆகியோருக்கு பிறகு வேட்பாளர் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளைய வீரராக பெருமை பெற்றார் குகேஷ். ஜனவரி 2024 ல் குகேஷ் tata ஸ்டீல் செஸ் போட்டியில் பங்கேற்று 13 ஆட்டங்களில் 8.5 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்தார். பின்னர் பல போட்டிகளில் கலந்து கொண்ட குகேஷ் 2024 நவம்பரில் நடந்த உலக வாகையாளர் போட்டியில் திங் லிரேனுடன் விளையாடும் தகுதி பெற்றார்.
உலக சதுரங்க வகையாளர் போட்டியில் விளையாடிய இளம் வீரர் முகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 டிசம்பர் மாதத்தில் குகேஷ் திங் லிரேனை வெற்றி கொண்டு உலக சதுரங்க வகையாளர் போட்டியில் 7.5- 6.5 புள்ளிகளில் வெற்றி பெற்று 18 வது உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ். இளம் வயதில் இருந்து இவர் செய்த சாதனைகள் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.