#image_title
அஜித்-விஜய் படங்கள் வெளியாகிறது என்றாலே தமிழ்நாட்டில் கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. அதிலும் பண்டிகை தினங்களில் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் 2014-ம் ஆண்டு இவர்களது வீரம்-ஜில்லா படங்கள் ஒரே நாளில் வெளியான போது, இருபடங்கள் நல கலெக்ஷனை வசூல் செய்தது என்றாலும் கூட விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இதில் பெரிதும் பாதிப்படைந்தனர். அதன் பிறகு இவர்களது படங்கள் ஒரே நாளில் வெளியாவது தவிர்க்கப்பட்டது.
#image_title
கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு இவர்களது படங்கள் ஒரே நாளில் வெளியானது. கடந்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் அடுத்தடுத்த நாட்கள் வெளியானது. தமிழ்நாடே அந்த நாட்களுக்காக எதிர்பார்த்து காத்திருந்தது. அதிரடி படங்களை தொடர்ந்து ஒரு கமர்ஷியலாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக வந்தது விஜய்யின் வாரிசு திரைப்படம். தெலுங்கில் நேரடியாக விஜய் இப்படம் மூலம் களமிறங்கினார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், சரத்குமார், ஷாம், சங்கீதா, எஸ்.ஜே.சூர்யா என பலர் நடிப்பில் இப்படம் வெளியானது.
#image_title
மறுபுறம் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியானது துணிவு. தொடர்ந்து குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்களில் நடித்து வந்த அஜித், பக்கா ஆக்ஷன் படமாக துணிவு படத்தில் நடித்திருந்தார். துணிவு படத்தை போனி கபூர் தயாரித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் பட விநியோகத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியது. மேலும், வாரிசு படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்த நிலையில், படத்தின் சில பகுதிகளில் மட்டும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தை விநியோகித்தது.
#image_title
இரு படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக இருப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது எனலாம். தமிழ்நாடு அளவில் வாரிசு படத்தை விட துணிவு படம் நல்ல வசூலை பெற்றதாக கூறப்பட்டது. அதே நேரம், ஒட்டுமொத்தமாக, துணிவு படத்தை வாரிசு வசூலில் வீழ்த்தியதாகவும் தகவல்கள் தெரிவித்தன. விஜய்யின் வாரிசு திரைப்படம் ஒட்டுமொத்தமாக 295 கோடி ரூபாயும், அஜித்தின் துணிவு திரைப்படம் 225 கோடி ரூபாயும் வசூல் செய்தது. வழக்கம் போல இரு நடிகர்களின் ரசிகர்களும், அவரவர் படங்களை உயர்த்தி சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…