கவர்ச்சியில் தாராளம் காட்டி இணையத்தை திணறச் செய்த ‘வாரிசு’ பட நடிகை…. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

By Begam

Published on:

நடிகை ராஸ்மிகா மந்தனாவின் சமீபத்திய ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கன்னட சினிமாவில் ‘க்ரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. என்னதான் இவர் கன்னட சினிமாவில் அறிமுகமானாலும் தெலுங்கு சினிமா தான் இவருக்கு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது. விஜய் தேவர் கொண்டவுடன் 2018 ல் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் அவர் பிரபலம் அடைந்தார்.

   

குறிப்பாக இப்படத்தின் ஒரு பாடலில் இடுப்பை காட்டியபடி சேலையை சரி செய்யும் ஒரு காட்சி இடம் பெறும். இந்த காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு தான் வருகிறது. ரஷ்மிகா மந்தனா தென்னிந்திய படங்களில் மட்டும் இன்றி பாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் பல முன்னணி  நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் அமிதாப்பச்சன் உடன் இணைந்து ‘குட் பாய்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவ்வாறாக பல படங்கள் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் ராஷ்மிகா தற்பொழுது நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. மேலும் இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் இன்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிடுவதில் தவறுவதில்லை நடிகை ரஷ்மிகா.

அந்த வகையில் தற்பொழுது இவர் ஹாட்டாக சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது  ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.