திருமண நாளை கேக் வெட்டி கோலாலமாக கொண்டாடிய தொகுப்பாளினி மணிமேகலை…. பல தடைகளை தாண்டி வென்ற காதல்… வைரலாகும் வீடியோ இதோ….

By Begam

Published on:

பிரபல தொகுப்பாளினியான மணிமேகலை தனது கணவருடன் இணைந்து கேக் வெட்டி தனது திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களை  கவர்ந்தவர் மணிமேகலை. இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். விஜே மணிமேகலை நடன இயக்குனரான காதல் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தநிலையில் இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

   

இவர்கள் கடந்த 2017 டிசம்பர் 6ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது வரை இவர்கள் சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வருகின்றனர். இவர்களது திருமணத்தன்று பலரும் வாழ்த்து தெரிவித்த போது, அவர்களை திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு நபர்களும் மோசமாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் செய்தனர்.

விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமானார் மணிமேகலை. 28 வயதான மணிமேகலை திருப்பூரில் பிறந்தவர். தனது முதுகலை பட்டப்படிப்பை சென்னையில் பயின்றவர். நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இணைந்தார்.

மணிமேகலையும் அவரது கணவரும் இணைந்து நடத்தி வரும் யூட்யூப் சேனலுக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் வாழ்வில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்துள்ளனர். தொகுப்பாளினி மணிமேகலை தனது நான்காம் ஆண்டு திருமண நாளை கேக் வெட்டி தனது கணவருடன் இணைந்து சிறப்பாக கொண்டாடி உள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv updates (@vijaytvglitz)