பணம் இல்லாதவங்க ஏன் குழந்தை பெத்துக்குறாங்க..? நீங்க செஞ்ச தப்புக்கு நான் காசு கொடுக்கணுமா..? சர்ச்சையை கிளப்பிய நடிகை வரலஷ்மியின் கருத்து..!!

Spread the love

நடிகையும் இயக்குநருமான வரலட்சுமி சரத்குமார், தனது ‘S சரஸ்வதி’ படத்திற்கான விளம்பர நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோது, இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் குறித்து மிகவும் வெளிப்படையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். “இந்தியாவில் செக்ஸ் பற்றிப் பேச யாரும் விரும்புவதில்லை, ஆனால் மக்கள் தொகையில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். எல்லாரும் ஒரு ஃபேக்டரி போல குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள், பிறகு கஷ்டப்படுகிறோம் என்கிறார்கள். முறையான திட்டமிடல் இல்லாமல் குழந்தைகளைப் பெற்றுவிட்டு பின் வருந்துவதில் அர்த்தமில்லை” என்று அவர் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தான் எதிரானவர் அல்ல என்றும், ஆனால் ஒரு குழந்தையை வளர்க்கத் தேவையான நிதி வசதி (Financial Stability) இருந்த பின்னரே அதற்குத் திட்டமிட வேண்டும் என்றும் வரலட்சுமி வலியுறுத்தியுள்ளார். “இன்றைய பொருளாதாரம் முற்றிலும் மாறிவிட்டது; குழந்தைகளை வளர்ப்பது மிகவும் செலவு குறைந்த காரியம் அல்ல. என்னிடம் வந்து தங்கள் குழந்தைகளின் படிப்புக்கோ அல்லது மற்ற உதவிகளுக்கோ உதவி கேட்கும் நபர்களிடம் நான் இதையேதான் சொல்கிறேன். நீங்கள் செய்த தவறுக்காக நான் ஏன் உதவி செய்ய வேண்டும்? உங்கள் குழந்தையை நீங்கள்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலட்சுமியின் இந்தக் கருத்துகளுக்குச் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் கிளம்பியுள்ளன. சிலர் இவரது பேச்சை எதார்த்தமான உண்மை என்றும், பொறுப்பான பெற்றோராக இருப்பதற்கு நிதித் திட்டமிடல் அவசியம் என்றும் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், வறுமையில் இருக்கும் குடும்பங்களை இவர் ‘ஃபேக்டரி’ என்று ஒப்பிட்டுப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், ஏழை எளிய மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவது போல் உள்ளது என்றும் பல நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், நடிகை லட்சுமி மஞ்சு போன்ற சக பிரபலங்கள் வரலட்சுமியின் இந்தக் கருத்தைப் பாராட்டியுள்ளனர்.

Soundarya

Recent Posts

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

6 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

26 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

32 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

41 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

1 மணத்தியாலம் ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

1 மணத்தியாலம் ago