Categories: சினிமா

ஏ ஆர் முருகதாஸ் முதல் வம்சி படிப்பல்லி வரை.. ஷூட்டிங் வீடு என விடாமல் பத்திரிக்கை வைக்கும் வரலட்சுமி.. வைரல் புகைப்படங்கள்..!

Spread the love

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு பிரபலத்தில் வீட்டிற்கு சென்று நடிகை வரலட்சுமி தனது திருமண பத்திரிகையை வைத்து வருகின்றார்.

சரத்குமார் மற்றும் சாயாதேவி தம்பதியின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தாரதப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல் உள்ளிட்ட  ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அதிலும் தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. கதாநாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கின்றார். சர்கார், சண்டக்கோழி 2 உள்ள திரைப்படங்களின் இவரது வில்லி கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி, ஹனுமான் உள்ளிட திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றிருந்தன. படங்களில் பிஸியாக நடித்து வரும் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்ய இருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மும்பையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது .

தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். வரலட்சுமி சரத்குமாரை இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கின்றார். மேலும் இவர் மும்பையில் ஒரு ஆர்ட் கேலரி ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகின்றார். நடிகை வரலட்சுமி-ன் திருமணம் அடுத்த மாதம் ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து லீலா பேலஸில் திருமண வரவேற்பு நடைபெறும் எனக் கூறப்படுகின்றது.  இதனால் திருமணம் பத்திரிக்கை வைப்பதில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றார் சரத்குமாரின் குடும்பம். ஏற்கனவே ரஜினி, கமல், பிரபு, மணிரத்தினம், பாலா, சித்தார்த், கனிமொழி, மு க ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வைத்த நிலையில் தற்போது நடிகை வரலட்சுமி ஏ ஆர் முருகதாஸ் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளரான வம்சி படிப்பள்ளி உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்களை வைத்து வருகின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

2 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

3 மணத்தியாலங்கள் ago