Categories: சினிமா

கருணாநிதிக்கு கலைஞர் என்ற பெயர் வந்தது எப்படி தெரியுமா..? இயக்குனர் பாக்யராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!!

Spread the love

பிரபல இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் கே.பாக்யராஜ். கடந்த 1983-ஆம் ஆண்டு ரிலீசான முந்தானை முடிச்சு படத்திற்காக பாக்யராஜுக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. கடந்த 2004-ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான சைமா விருது வழங்கப்பட்டது. இயக்குனர் பாரதிராஜாவிடம் பாக்யராஜ் உதவி இயக்குனராக வேலை பார்த்தார்.

கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்தார். 16 வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். புதிய வார்ப்புகள் என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கடந்த 1979 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சுவர் இல்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

இந்நிலையில் கே.பாக்யராஜ் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசியபோது பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, அரசியல் கலைஞரை விட எனக்கு சினிமா கலைஞர் தான் மிகவும் பிடிக்கும். கருணாநிதிக்கு கலைஞர் என பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு. அன்றைய காலகட்டத்தில் அண்ணாவுக்கும், எம்.ஆர் ராதா அவர்களுக்கும் நல்ல நட்பு இருந்தது. ஆனால் ஏதோ ஒரு விஷயத்தினால் எம்.ஆர் ராதா அவர்களுக்கு அண்ணா மீது மிகவும் கோபம் இருந்தது.

ஏதோ ஒரு ஊரில் அண்ணாவின் நாடக அரங்கேற்றப்படுகிறது. அதிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் எம்.ஆர் ராதாவின் நாடகமும் நடக்கிறது. அந்த நாடகத்திற்கு கலைஞர் தான் கதை, வசனம் எழுதுகிறார். போகும் வழி எல்லாம் அறிஞர் அண்ணாவின் நாடகம் நடப்பதாக போஸ்டர் இருந்தது. எம் ஆர் ராதாவுக்கு அண்ணா மீது கோபம் இருந்ததால் அவரும் பதிலுக்கு அறிஞர் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் தனது நாடகம் நடைபெற இருப்பதாக போஸ்டர் அடித்தார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கருணாநிதி அண்ணா மட்டும் தான் அறிஞர். நான் அறிஞர் கிடையாது. நான் ஒரு கலைஞர் மட்டும்தான் என கூறியுள்ளார். அதுவே நன்றாக இருக்கிறது எனக் கூறி அன்றிலிருந்து எம்.ஆர் ராதா கருணாநிதியை  கலைஞர் என்று அழைக்க ஆரம்பித்தார். அப்படித்தான் அவர் கலைஞர் கருணாநிதி என அழைக்கப்பட்டதாக கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.

admin

Recent Posts

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்…” செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாய்ச்சல்…!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…

7 minutes ago

“தந்தை இறந்த செய்தி கேட்டு கதறிய தருணம்”… கலைஞர் போட்ட ஒரே ஒரு கண்டிஷன்… மேடையிலேயே கண் கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…

8 minutes ago

நாளைக்கு டிக்கெட் எடுக்காதீங்க!… ஏப்ரல் 23 இலவச பேருந்து பயணம்…. தமிழக அரசின் ஸ்பெஷல் கிப்ட்.. யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…

13 minutes ago

சீனாவின் ரகசிய சரக்குக் கப்பல்… ஈரானில் இறங்கும் விமானங்கள்… அமெரிக்காவை அதிர வைத்த உளவுத் தகவல்…!

பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…

13 minutes ago

BREAKING: தமிழகம் முதல் சிங்கப்பூர் வரை… கண்ணீரில் நனைந்த தமிழ் இலக்கிய உலகம்… புதுமைத்தேனீ மா. அன்பழகன் காலமானார்…!

சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…

22 minutes ago

வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ரூ.15000 வரை இனி கவலை வேண்டாம்… RBI கொடுத்த செம அப்டேட்…!!!

வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…

23 minutes ago