Categories: சினிமா

வீட்டை விட்டு வெளியே போன மீனா.. பதட்டத்தில் ஒட்டுமொத்த குடும்பம்.. விறுவிறுப்பான கதைகளத்துடன் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்களிடையே நல்ல ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல்தான், அதிலும் இந்த சீரியலில் வரும் முத்து மற்றும் மீனாவிற்காக ஏகப்பட்ட குடும்ப பெண்கள் இந்த சீரியலை விடாமல் பார்த்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் முத்து எப்போதும் போல மீனாவை கஷ்டப்படுத்தும் விதமாக தனது நண்பனிடம் பேசிவிட இதனால் சற்று மன வருத்தத்தில் இருந்த மீனா சமைக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். பின்னர் அனைவரும் வேலைக்கு கிளம்பி வெளியில் சென்று விட்டார்கள். அந்த நேரத்தில் மீனா வெளியில் போனவர் திரும்ப வரவே இல்லை.

இரவு ஆன போதிலும் கூட அவர் வீட்டிற்கு திரும்பாத காரணத்தினால் வீட்டில் இருந்தவர் அனைவருமே மிகுந்த பயத்தில் இருந்தார்கள். ஆளுக்கு ஒவ்வொரு விஷயத்தை கூற ஆரம்பித்தார்கள். இதில் விஜயா, ரோகினி, மனோஜ் ஆகியோருக்கு மிகுந்த மகிழ்ச்சி. வாய்க்கு வந்தபடியெல்லாம் மீனாவை திட்டி தீர்த்து வந்தார் விஜயா. ஆனால் மிகுந்த பயத்தில் இருந்த முத்து தெரு தெருவாக தேடி அலைகிறார்.

பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க செல்லும் போது அவருடைய தம்பியும் அங்கு வந்து என் அக்கா காணாமல் போனதற்கு என் மாமா தான் காரணம் எனக் கூறி புகார் அளிக்கின்றார். இதை விசாரணை செய்த போலீசார் உடனே இது குடும்ப பிரச்சினை தான் நாளை காலை வரை பொறுத்து இருங்கள் வரவில்லை என்றால் கம்பளைண்ட் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறிவிடுகிறார்.

பின்னர் மிகுந்த பயத்துடன் வீட்டிற்கு வருகிறார் முத்து, அங்கு வந்து பார்த்தால் மீனா கேஷுவலாக தண்ணீர் குடித்துக் கொண்டு வருகின்றார். இதை பார்த்த முத்து உன்ன காணாம எங்கெங்கெல்லாம் தேடிட்டு இருக்கேன். நீ என்ன சாதாரணமா நடந்து வர என்று கேட்க, நான் எனக்கு தெரிந்த பெண்ணின் வீட்டிற்கு விசேஷத்திற்கு சென்றேன். இதனை நான் ஸ்ருதியிடம் கூறிவிட்டு தான் என்று கூறுகிறார்.

ஆனால் ஸுருதியோ என்னிடம் மீனா எதையும் கூறவில்லை என்று சொல்கிறார். அதாவது மீனா கூறும் போது ஸ்ருதி தனது காதில் ஹெட்போன் அணிந்திருந்தார். இதனால் அவர் என்ன கூறினார் என்பது ஸ்ருதிக்கு சுத்தமாக கேட்கவில்லை. பின்னர் முத்துவும் வீணாவும் கட்டி அணைத்து கொண்டனர். இந்த எபிசோடு மிகவும் எமோஷனல் ஆகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது.

Mahalakshmi

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

28 minutes ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

30 minutes ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

36 minutes ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

44 minutes ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

1 மணத்தியாலம் ago