நள்ளிரவில் பிரதீப் ஆண்டனி Fan-ஆல் தாக்கப்பட்ட வனிதா…? அவரே வெளியிட்ட புகைப்படம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

By Begam on கார்த்திகை 26, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்பொழுது பரபரப்பாகவும் ,விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் , 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என 23 போட்டியாளர்கள்  கலந்து கொண்டனர். அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 57 நாட்களை நிறைவு செய்துள்ளது. தொடங்கப்பட்ட நாள் முதலே பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் இந்த  நிகழ்ச்சி ஆனது ஒளிபரப்பாகி வருகிறது.

   

இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமாரின் முத்து மாகாளான ஜோதிகா விஜயகுமார். நடிகை வனிதா தனது மகளுக்கு ஆதரவாக தனது இணையதள பக்கங்களிலும் ,பேட்டிகளிலும் அவ்வப்பொழுது கலந்து கொண்டு வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

   

Actress Vanitha Vijayakumar

 

அதோடு மட்டுமின்றி இவர் பல சேனல்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனமும் செய்து வருகிறார். அப்படி நள்ளிரவில் பிக் பாஸ் பேட்டியை முடித்துவிட்டு வரும்பொழுது தன் மீது மறுபுநபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக புகைப்படத்துடன் பக்கத்தில் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை வனிதா.

அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘நள்ளிரவு ஒரு மணி அளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு, தனது காரை எடுக்க சென்றபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ‘ரெட் கார்டு  கொடுக்கிறீர்களா?’ என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியதாகவும், அந்த மர்ம நபரின் கோரமான சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் பிரதிப் ஆண்டனியின் ஆதரவாளர் தான்’ என்றும் கூறியுள்ளார்.  இதோ அந்த பதிவு….