என்னது.. நடிகை ஷபானா கர்ப்பமா இருக்காங்களா…? அவரது கணவர் ஆர்யன் வெளியிட்ட பதிவு வைரல்…

By Begam on கார்த்திகை 26, 2023

Spread the love

சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஷபானா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல ‘செம்பருத்தி’ சீரியலில் பார்வதியாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். தன் அழகாலும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்திலும் இணையத்தில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். இவருக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

 

இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்,  தற்பொழுது தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். நடிகர் ஆர்யன் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில்  எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஷபானா மற்றும் ஆர்யன். இவர்களிருவருக்கும்  திருமணமாகி 2 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் எந்த Good News இதுவரை கூறவில்லை. இந்நிலையில் தற்போது ஆர்யன் தனது இன்ஸ்டா பதிவில் ‘விரைவில் குட்டி shabboo-வை launch பன்றோம்’ என பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ஷபானா கர்பபமாக இருக்கிறாரா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த பதிவு…