திடீரென்று முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த வனிதா.. என்னவா இருக்கும்..?

By Priya Ram on அக்டோபர் 1, 2024

Spread the love

நடிகை வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து திரையுலகில் கலந்து பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு மாணிக்கம் திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் தான் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். அதன்பிறகு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார்.

நானே இதற்காகத் தான் அவனை யூஸ் பண்ணுனேன்! ராபர்ட் குறித்து வனிதா உடைத்த உண்மை - மனிதன்

   

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக வனிதா விஜயகுமார் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு இரண்டு திருமணங்கள் செய்தார். அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். இப்போது அடுத்தடுத்த படங்களில் வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார்.

   

Vanitha About Bigg Boss Robert Master

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட் மாஸ்டரும் வனிதாவும் காதலித்து வருவதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தது. இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்தனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக வனிதா ராபர்ட் மாஸ்டரை விட்டு பிரிந்து விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற படத்தில் நடிப்பதாக கடந்த மே மாதம் இணையத்தில் செய்திகள் வெளியானது.

#image_title

இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ராபர்ட் மாஸ்டர் உடன் இருக்கும் புகைப்படத்தை வைத்துள்ளார். மேலும் அதில் சேவ் தி டேட் என அக்டோபர் ஐந்தாம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் படத்திற்கான அப்டேட் ஆக இருக்குமா? அல்லது வேறு ஏதாவது விஷயமாக இருக்குமா? என குழப்பத்தில் உள்ளனர்.

 

author avatar
Priya Ram