11 ஆம் நூற்றாண்டு முதல் மன்னர்களுக்கு துணையாக போருக்கு சென்று வென்றவர்கள்… திருநெல்வேலி சிங்கம்பட்டி ஜமீன் சமஸ்தானத்தின் வரலாறு தெரியுமா…?

By Meena on அக்டோபர் 1, 2024

Spread the love

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சீமராஜா. இந்த திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் கதையை மையமாக வைத்து படம் எடுத்திருப்பார்கள். இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த சிங்கம்பட்டி சமஸ்தானம் எப்படி உருவானது ஆட்சியாளர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் போன்றவை உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி இனி காண்போம்.

   

சிங்கம்பட்டி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உண்டான ஒரு பெரிய ஊராகும். விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு விஜயநகரத்தின் கீழ் மதுரை ஆட்சியாளர்களாக இருந்த விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் இறையாண்மை பெற்ற ஆட்சி தலைவர்களாக நியமித்தனர்.

   

மன்னர்களின் ஆளுமைக்குள் இந்த குறுகிய ஆட்சி பரப்புகளை பிரிவினை செய்து 72 பாளையங்களாக கிபி 1433 ஆம் ஆண்டு அமைத்தார்கள். அப்போது பிறந்தது தான் சிங்கம்பட்டி என்னும் ஊர். விஸ்வநாத நாயக்கர் மதுரையை சுற்றி புதியதாக கோட்டை அமைத்தார். இதில் அமைக்கப்பட்ட 72 கொத்தளங்களில் 21 கொத்தளங்கள் சிங்கம்பட்டி பாளையக்காரர் தலைமையில் விடப்பட்டது.

 

இந்த சிங்கம்பட்டி சமஸ்தானம் பதினோராம் நூற்றாண்டில் தோன்றியது என்று கூறப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீனை சேர்ந்தவர்கள் மறவர் அல்லது தேவர் சமூகத்தை சேர்ந்தவராக இருந்திருக்கின்றனர். இந்த சிங்கம்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த ராஜாக்கள் புலி தேவர் மன்னர்களுடன் போருக்கு துணையாக சென்று வெற்றி கண்டிருக்கின்றனர். மேலும் ஆற்காடு நவாபை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார்கள் என்றும் வரலாறு கூறுகிறது.

1200 முதல் 1300 காலகட்டத்தில் ஐந்தாவது சிங்கம்பட்டி ராஜா மன்னர் காளித பாண்டியனுடன் இணைந்து போர்களில் பங்கேற்றுள்ளார். 1750 இல் இருந்த சிங்கம்பட்டி ராஜா பூலித்தேவனுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டனர். அப்போது சிங்கம்பட்டியில் இருந்து ஆயிரம் குதிரைகளும் யானைகளும் போருக்காக அனுப்பி வைக்கப்பட்டதாம்.

சிங்கம்பட்டி ஜமீன்தார்கள் மக்களிடம் அவ்வளவு அன்பாக இருந்திருக்கிறார்கள். சிங்கம்பட்டியின் முப்பதாவது ராஜா 1903 முதல் 1930 வரை ஆட்சி செய்யும்போது தீர்த்தபதி பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மருத்துவமனை போன்றவற்றை கட்டி கொடுத்து இலவசமாக சேவை செய்திருக்கின்றனர். அவை இன்றளவும் செயல்பட்டு இருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஜமீன்தார் அழிப்பு இயக்கத்தின் மூலம் இவர்கள் ஆட்சி கலைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார்களிடம் 80,000 ஏக்கர் நிலம் இருந்ததாகவும் அதே அரசுடைமை ஆக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிங்கம்பட்டி சமஸ்தானத்திற்கு எடுத்துக்காட்டாக சிங்கம்பட்டி அரண்மனை இந்தளவும் 5 ஏக்கரில் பறந்து விரிந்திருக்கிறது. ஆடி அமாவாசையும் அதற்கு அடுத்த நாளும் நடக்கும் உற்சவ நாட்களில் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் சிங்கம்பட்டி மன்னர் மரபின் வாரிசு மன்னருடைய மக்களுக்கு காட்சி கொடுப்பார். சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ராஜாவாக இருந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி மகராஜா சில வருடங்களுக்கு முன் அவர் காலமானார். இன்றளவும் சிங்கம்பட்டி அரண்மனையில் அவர்கள் மூதாதையர்கள் போருக்காக பயன்படுத்திய ஆயுதங்கள் வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் எல்லாம் அங்கு இருக்கிறதாக கூறப்படுகிறது.