10 பேர் அமர்ந்து Open Pedal Cycle இல் சென்றால் எப்படி இருக்கும்…? புதுமையான பார்ட்டி மூலம் பிரபலமாகும் “Pedal Pub”…

By admin on ஐப்பசி 1, 2024

Spread the love

2007 ஆம் ஆண்டு மின்சோட்டாவை தளமாகக் கொண்டு ஆம்ஸ்டர்டம்மில் இருந்து அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டது தான் பார்ட்டி பைக். இந்த பார்ட்டி பைக்கில் உங்கள் நண்பர்களுடன் தெருக்களில் மிதித்து பானங்களை குடித்து மகிழும் புதிய வகையான Pedal Pub என்ற பார்ட்டி பைக்கை தொடங்கினர்.

   

இந்த Pedal Pub என்பது பார் ன் வீல்ஸ் ஸ்டார்ட் அப் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சவாரிகளை வழங்குகிறது. விருந்தினர்களுக்கு வேடிக்கையான பாதுகாப்பான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. இது வட அமெரிக்காவில் பிரபலமாக விரிவடைந்து வருகிறது.

   

Pedal Pubபில் சவாரி செய்வது ஒரு பைக் சவாரியை விட தனியான ஒரு அனுபவத்தை தருகிறது என்று நிறுவனம் கூறுகிறது. இந்த பெடல் பைக்கில் நீங்கள் பயணம் செய்யும்போது விருப்பமான பானங்களை அருந்திக்கொண்டு பாடல்களை கேட்டுக்கொண்டு led விளக்குகள் என பண்டிகை சூழலை உருவாக்குகிறது. நீங்கள் வீட்டிலிருந்தே போகும் இடத்தை முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளலாம்.

 

தற்போது பரபரப்பான சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு வித்தியாசமான நமது மனதை இதமாக்கும் ஒரு செயலில் ஈடுபடும் இந்த Pedal Pub பல சுற்றிலா பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகளை இழுக்கிறது. இது அங்குள்ள சுற்றுலா பயணிகளால் இது உடற்பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது. பெடல் செய்து கொண்டே நகரத்தின் பரபரப்பான அழகான காட்சியை பார்ப்பது வழக்கத்தைவிட இது ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும்.

Pedal Pub னது எதிர்காலத்தில் நீண்ட சுற்று பயணங்களுக்காக மின்சார பைக்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது மொபைல் பொழுதுபோக்கு அம்சத்தை உள்ளடக்கி இருக்கிறது. அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று நகரத்தில் எல்லா பகுதிகளிளும் இதை உருவாக்க வேண்டும் என்று நிறுவனம் திட்டமிட்டுள்ளது.