பட குழுவுக்கு தட புடலாக பிரியாணி விருந்து வைத்து அசத்திய அருண் விஜய்.. வைரலாகும் வீடியோ..!!

By Priya Ram on அக்டோபர் 1, 2024

Spread the love

முன்னணி நடிகரான அருண் விஜய் தமிழ், மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1995-ஆம் ஆண்டு சுந்தர்.சி-யின் இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். கடந்த 1998-ஆம் ஆண்டு ரிலீசான துள்ளித் தெரிந்த காலம், 2001-ஆம் ஆண்டு ரிலீசான பாண்டவர் பூமி ஆகிய படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

   

செக்க சிவந்த வானம், அத்தியாயம் 1, தடம் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் அருண் விஜய். ஏ.எல் விஜய் இயக்கத்தை அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் ஒன், அச்சம் என்பது இல்லையே ஆகிய படங்கள் வெற்றி பெற்றது.

   

 

பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்த வருகிறார். அந்த படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே திருக்குமரன் இயக்கத்தில் உருவாவும் ரெட்டை தல திரைப்படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். மான் கராத்தே, கெத்து ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் திருக்குமரன்.

அருண் விஜய்யின் ரெட்ட தல அப்டேட்!

ரெட்ட தல படத்தை பி டி ஜி யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இப்போது முழுவதுமாக சூட்டிங் முடிவடைந்து விட்டது. இதனால் அருண் விஜய் பட குழுவினருக்கு தடபுடலாக விருந்து வைத்துள்ளார். அது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

author avatar
Priya Ram