தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கும் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிறகு இரண்டு நாட்கள் கழித்து வெளியிட்ட அறிக்கையில், விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்துள்ளார் என்றும் அது என் ஒப்புதல் இல்லாமல் அவராக எடுத்தது என்றும் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி, ஆர்த்திக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேன், அவர் விவாகரத்து விஷயமே எனக்கு தெரியாது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார் எனவும் அவர் பாடகியை தாண்டி ஒரு சைக்காலஜிஸ்ட், அவர் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார், இருவரும் சேர்ந்து இலவசமாக சேவை செய்ய ஸ்ப்ரிட்சுவல் சென்டர் மாதிரி கூட ஆரம்பிக்கலாம் என்று இருந்தோம். அந்தப் பெண்ணை பற்றி தவறாக பேசாதீர்கள் என்று ஜெயம் ரவி கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை ஈசிஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தன்னுடைய உடமைகளை ஒப்படைக்குமாறு அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார் அளித்திருந்தார்.
இந்த விஷயம் பூதகரமாக வெடித்துள்ள நிலையில் நேற்று ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தைப் பற்றி பலர் பேசி வருகிறார்கள். உண்மையை மறைக்க, பொதுவெளியில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், என்னையும் தவறாக சித்தரிப்போருக்கு நான் பதில் எதுவும் கூறாமல் அமைதி காப்பது எனது பலவீனமோ, குற்ற உணர்வின் அடையாளமும் அல்ல என்பதை இங்கே வலியுறுத்துகிறேன். சட்டத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆர்த்தி ரவி இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்த பதிவுக்கு குஷ்பு மற்றும் சைந்தவி ஆகியோர் கமெண்ட் செய்துள்ளனர். அதில் பாடகியும், ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவியான சைந்தவி “தைரியமாக இருங்கள் அக்கா. உங்களுக்காக என் பிராத்தனைகள்” என்றும், நடிகை குஷ்பு, “நீ மிகவும் தைரியமானவள்” என்றும் ஆறுதல் கூறும் வகையில் கமெண்ட் செய்துள்ளனர்.