தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக தி கிரேட் ஆப் ஆல் டைம் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. அடுத்ததாக தளபதி தனது 69-ஆவது பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து முழு நேரமாக அரசியலில் ஈடுபட போகிறார். எதற்காக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அந்த மாநாடு முடிந்தவுடன் தளபதி 69 ஆவது படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல கே.வி .என் தயாரிப்பு நிறுவனம் தற்போது யஷ் நடிப்பில் உருவாகும் டாக்சிக் திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது.
தளபதி 69-ஆவது படத்தையும் கே.வி.என் நிறுவனம் தான் தயாரிக்கிறது. தளபதியின் கடைசி படத்தை யார் இயக்குவார் என பல நாட்களாக பேச்சு அடிபட்டது. கடைசியாக ஹச் வினோத் தான் தளபதியின் 69 ஆவது படத்தை இயக்கப் போகிறார் என அறிவிப்பு வெளியானது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்க போகிறார்.
இந்த நிலையில் பிரபல நடிகரான பாபி தியோல் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார். இந்த நிலையில் தளபதி 69 ஆவது பட குழுவினர் பாபி தியோலை வில்லனாக நடிக்க கமிட் செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு சற்று முன்பு வெளியானது. இதனால் படக்குழுவினால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.