தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், லைலா உள்ளிட்டா பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் திரிஷாவும் ஒரு பாடலுக்கு நடனமாடி கலக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். ஹெச். வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தமிழன். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் மஜித் இயக்கியிருந்த நிலையில் ஜி. வெங்கடேசன் என்பவர் தயாரித்திருந்தார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுக நடிகை பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். மேலும் நாசர் மற்றும் ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் விஜய் உடன் இணைந்து டெல்லி கணேஷ் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது குறித்து டெல்லி கணேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், விஜயுடன் நான் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளேன்.
அதில் தமிழன் திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தில் முதலில் ஒருவரை நடிக்க வைத்து செட் ஆகாததால் விஜய் உடனே டெல்லி கணேஷ் சார் கிட்ட பேசிப் பாருங்க அவர் இந்த கதாபாத்திரத்திற்கு கரெக்ட்டா இருப்பாரு என்று கூறியுள்ளார். உடனே என்னிடம் வந்து பேசினாங்க. முதலில் நான் நடிக்க மாட்டேன் என்று தான் கூறினேன். அதன்பிறகு என்னுடன் இருந்தவர் விஜய் உங்க பேரை சொல்லி இருக்கார் என்றால் கட்டாயம் அது நல்ல கதாபாத்திரமாகத் தான் இருக்கும் நீங்கள் போய் நடித்துக் கொடுங்கள் என்று கூறினார். பிறகுதான் தமிழன் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்தேன் என்று டெல்லி கணேஷ் கூறியுள்ளார்.