நடிகை வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து திரையுலகில் கலந்து பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு மாணிக்கம் திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் தான் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். அதன்பிறகு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக வனிதா விஜயகுமார் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு இரண்டு திருமணங்கள் செய்தார். அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். இப்போது அடுத்தடுத்த படங்களில் வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார்.

வனிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ராபர்ட் மாஸ்டர் உடன் இருக்கும் புகைப்படத்தை வைத்துள்ளார். மேலும் அதில் சேவ் தி டேட் என அக்டோபர் ஐந்தாம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் படத்திற்கான அப்டேட் ஆக இருக்குமா? அல்லது வேறு ஏதாவது விஷயமாக இருக்குமா? என குழப்பத்தில் உள்ளனர்.
View this post on Instagram
இந்த நிலையில் வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் பிக் பாஸ் சீசன் 8 ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என விஜய் சேதுபதி பேசிய வசனத்தை ரீ-கிரியேட் செய்து உள்ளனர். அதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரையும் கலாய்த்து வருகின்றனர்.
