இறை வழிபாட்டில் கற்பூரம் ஏற்றுவது ஏன்…? அதனால் இவ்வளவு நன்மைகளா…?

By admin on ஐப்பசி 4, 2024

Spread the love

இந்து மத வழிபாட்டில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது கற்பூரம் ஏற்றுவது. எந்த பூஜையின் முடிவிலும் கற்பூரம் காட்டுவது வழக்கமான ஒன்று. இது தவிர கோவில்களில் சன்னதிக்கு முன்போ அல்லது கொடி மரத்திற்கு முன்போ கற்பூரம் ஏற்றி வழிபடுவதும் உண்டு. இந்த கற்பூரம் இறைவழிபாட்டில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது இதனால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

   

கற்பூரம் கரைந்து எறிவதற்கு பின்னால் இருக்கும் கருத்து இந்த மனித உடல் கரைந்து ஜோதியாக ஆன்மாவாக இறைவனிடம் ஐக்கியமாக வேண்டும் இந்த பிறவியிலிருந்து இறைவன் முக்தி அளிக்க வேண்டும் என்பதன் பொருட்டே கற்பூரம் ஏற்றப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் கற்பூர வாசனை நமது ஆன்மாவிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எந்த இடத்தில் கற்பூரம் இருக்கிறதோ அந்த இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.

   

இது மட்டுமல்லாமல் வீட்டிலும் கற்பூரம் ஏற்றுவது எதிர்மறை ஆற்றல்களை தடுத்து நேர்மறை ற்றல்ளை பெருக்கும். இதனால் குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மாலை நேரத்தில் வீட்டில் வழிபாடு செய்யும்போது கற்பூர ஆரத்தி ஏற்றுவது தெய்வங்களை மகிழ்விப்பதாகவும் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கிறது என்பது ஐதீகம்.

 

இது மட்டுமல்லாமல் தொடர்ந்து கற்பூரம் வீட்டில் ஏற்றுவதால் குடும்பத்தின் செழிப்பு மற்றும் நிதி முன்னேற்றம் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது. கற்பூரம் ஏற்றுவது மட்டுமல்லாமல் ஒரு சில இடத்தில் பச்சை கற்பூரம் வைத்தாலும் அது நன்மை பயக்கும். நீங்கள் பணத்தை வைத்து எடுக்கும் லாக்கர் அல்லது பீரோவில் பச்சைக் கற்பூரத்தை போட்டு வைத்தால் அது பணவரவை அதிகரிக்கும்.

சமையலறையில் கற்பூரத் துண்டுகளை வைப்பது லட்சுமி தேவியை மகிழ்விக்கும். இதனால் நமக்கு உணவு மற்றும் தனம் தானியத்தை குறைவில்லாமல் வைத்துக் கொள்ளும். வாசலில் கற்பூரம் கொளுத்தும் போது அது கண் திருஷ்டி விலகி கெட்ட சக்திகளை வெளியேற்றும். எந்த ஒரு வழிபாடு செய்தாலும் கற்பூரம் காட்டாமல் நிறைவு செய்யக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.