இயக்குனர் என்னை அறைந்தார்… ஆனால் ஊடகத்தில் செய்தி அப்படி வெளியானது.. பல வருட ஆதங்கத்தைக் கொட்டிய பத்மபிரியா!

By vinoth on ஐப்பசி 4, 2024

Spread the love

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட மலையாள நடிகை தமிழில் தவமாய் தவமிருந்து படம் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் நடிகையானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மலையாள மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

தமிழில் பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் மற்றும் தங்க மீன்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்தத் திரைப்படங்களில் நடித்த போதிலும் இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்காததால் தமிழில் இருந்து மீண்டும் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடிக்கச் சென்றார்.

   

actress padmapriya

   

இவர் நடித்த மிருகம் படத்தின் போது இவரை இயக்குனர் சாமி சரியாக நடிக்கவில்லை எனக் கூறி அறைந்துள்ளார். இதை எதிர்த்து அவர் அப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். அதனால் இயக்குனர் சாமி ஆறு மாதங்கள் படங்கள் இயக்க தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இந்த சர்ச்சைக் காரணமாக பத்மபிரியா ஏற்கனவே ஒப்பந்தம் ஆன படங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். அதுவும் அவர் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்ததற்கு ஒரு காரணமாக அமைந்தது.

 

Mirugam movie clip

இந்நிலையில் இப்போது அவர் மிருகம் படத்தின் போது நடந்ததை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “மிருகம் படத்தில் அந்த இயக்குனர் என்னை அறைந்தார். ஆனால் ஊடகங்களில் நான் அவரை அறைந்ததாக செய்திகள் வெளியாகின. ஒரு பெண் ஒரு பிரச்சனையைப் பற்றி பேசினால் அவளையே பிரச்சனை ஆக்கி விடுகிறார்கள். இதனால் எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போயுள்ளது. ஆனால் அந்த படத்தில் நடித்ததற்காக எனக்கு மாநில விருது கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.