பிக்பாஸ் சீசன் 7- இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 2017-ம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக தற்போது 7வது சீசனில் நிற்கிறது. கிட்டத்த 100 நாட்கள் நமக்கு பரீட்சையமான பிரபலங்கள் வெளியுலக தொடர்பு இன்றி தன்னிச்சையாக பிக் பாஸ் வீட்டில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர். எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருட சீசனில் அதிகளவிலான போட்டியாளர்கள் உள்ளே அனுப்பட்டனர். பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள், வித்தியாசமான டாஸ்குகள் என பல புதுமைகள் 7-வது சீசனில் புகுத்தப்பட்டது.

#image_title
சில வாரங்களிலேயே மாயா, பூர்ணிமா உட்பட சிலரின் தவறான புகார்களால், மக்களிடம் பிரபலமான பிரதீப் ஆண்டனியை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார் கமல்ஹாசன். இதன்மூலம் அவர் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றார். பிரதீப் பக்கம் இருந்த நியாயங்களை அவர் கேட்காமலேயே ஒருதலை பட்சமாக செயல்படுவதாக பலரும் அவர் மீது கருத்துகளை பதிவிடத் தொடங்கினர். இதனால் சற்று சிந்தித்து செயல்பட்ட அவர், அடுத்த வாரம் பூர்ணிமா மற்றும் மாயா ஆகியோரை சற்று கடிந்து கொண்டார்.
ஆயினும் கூட, வாரா வாரம் அவர் வரும் நாட்களில் உண்மையாக குற்றம் செய்தவர்களை பெரித்தும் கண்டுகொள்ளவில்லை, அவர் தவறாக நிகழ்ச்சியை வழிநடத்துகிறார் என அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையில் இந்த பிக்பாஸ் சீசன் தொடங்கிய நாள் முதல், முந்தைய சீசனின் போட்டியாளரும், நடிகையுமான வனிதா, பிக்பாஸ் குறித்து தினமும் தனது கருத்துகளை சமூக வலைதளம் மூலம் விவரித்து வந்தார். அவரது மகளான ஜோவிகாவும் இந்த சீசனில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title
வெற்றியாளரை தேர்வு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், விஷ்ணு, அர்ச்சனா, மாயா, தினேஷ், மணி 5 பேர் மட்டுமே இறுதிப் போட்டியாளர்களாக உள்ளனர். இதில் மாயா அல்லது அர்ச்சனா இருவரில் ஒருவரே வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வனிதா, இந்த வருடம் வெற்றி பெறுவதற்கு யாருக்குமே துப்பு இல்லை எனவும், பணத்தை கொடுத்து வேண்டுமானால் பட்டத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த சீசன் ஒன்று இருந்தால் அதில் கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விடக் கூடாது என கூறியுள்ள அவர், இந்த வருடம் யாருமே வெற்றியாளர் இல்லை என அவர் அறிவிப்பாரா? அதற்கான திராணி இருக்கிறதா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
View this post on Instagram
