சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அயலான்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நேற்று அனைத்து திரையரங்குகளிலும் களமிறங்கியது. இத்திரைப்படத்தில் நடந்த நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அயலான் படத்தில் ஒரு காட்சி வைக்கபட்டு இருந்தது.

சுமார் ஆறு வருட போராட்டத்திற்கு பிறகு அயலான் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2015 ம் ஆண்டு இயக்குனராக திரையுலகில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் இயக்குனர் ஆர் ரவிக்குமார் அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2016 ல் ‘அயலான்’ திரைப்படம் உருவாக்க பூஜை போடப்பட்டது. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் 14 படமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் கடந்த ஆறு வருடமாக அயலான் திரைப்படம் முழுமையடையாமல் இருந்து வந்த நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது.

இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஏலியன் செய்யும் குறும்புகளும், யோகிபாபுவை கலாய்க்கும் விதமும் ஹயிலைட்டாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் குடும்பப் படமாகவும் மற்றும் குழந்தைகள் கொண்டாடும் படமாகவும் இருக்கிறது.

அயலான் படத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் ஒரு நிகழ்வு நடந்திருந்தது, அதாவது மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படத்தில் அவரின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தும் காட்சி இடம் பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அயலான் பட குழுவினர் சார்பில் இப்படத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இப்படம் ‘ஓடாது என எமோஷனல் மூலம் லாக் பண்ணிட்டாங்க போல’ என்று நெட்டிசென்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளுகின்றனர்.
