Connect with us

CINEMA

மேடையில் மாயா – கமலை சேர்த்துவைத்து ட்ரோல் செய்த புகழ், குரேஷி.. சர்ச்சைக்குள்ளான வீடியோ..

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெற்ற பேராதரவைக் கொண்டு 6 சீசன்களை கடந்து தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் 7வது சீசனும் இறுதிக்கட்டத்தை எட்டி  உள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்களையும்  உலகநாயகன் கமலஹாசனே  தொகுத்து வழங்கி வருகிறார்.

   

இறுதிக்கட்டத்தை எட்டிய இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி யின் கிராண்ட் பினாலே நாளை நடக்க உள்ளது. அர்ச்சனா, மாயா,  விஷ்ணு, தினேஷ், மணிசந்திரா என்று 5 நபர்கள் பைனலிஸ்டாக உள்ளனர். இவர்களில் இரண்டு மிட் வீக் எவிக்ஷன் இந்த வாரம் இன்று இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் யார் வெளியேற்றப்படுவார்? யார் டைட்டில் வெல்வார்கள் என்பது தற்பொழுது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை பாதி நிகழ்ச்சி நிறைவடைந்த உடனே ரசிகர்கள் இவர்கள் தான் டைட்டிலை வெல்வார்கள் என்பதை கணித்து விடுவார்கள். ஆனால் இந்த சீசனை பொறுத்தவரையில் தற்போது வரை யார் வெற்றியாளர் என்பதை ரசிகர்களால் கணிக்க முடியவில்லை என்றே கூறலாம். பெரும்பாலும் மாயா தான் பிக் பாஸ் டைட்டில் வெல்வார் என்றும் தங்களது கருத்தை கூறி வருகின்றனர்.

ஆனால் ஒரு சிலரோ அர்ச்சனா வெல்வார் என்றும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் பலரும் மாயா பிக் பாஸ் டைட்டில் வெல்வார் என்று கூறுவதற்கு காரணம் ,நடிகர் கமலஹாசன் தான். ஏனென்றால் இவர் மாயாவிற்கு ஆதரவாகவே பல சமயங்களில் பேசி இந்த சீசனில் அதிகம் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார்.இது பிக் பாஸா? இல்ல மாயா பாஸா?  என்றும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் விஜய் டிவியை சேர்ந்த புகழ் மற்றும் குரேஷி இருவரும் துபாயில் நடைபெற்ற வெளிநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அவர்கள் கமலஹாசன் மற்றும் மாயாவை போல செய்து காட்டி, அவர்களை மேடையிலேயே பங்கமாக கலாய்த்துள்ளன.ர் புகழ் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் கமல் குரலில் பதில் அளிக்கும் குரேஷி ‘மாயா.. மாயா’ என்ற பெயர் பொருந்திய பதிலயே  கூற தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top