திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறிவைத்து ஏமாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசி இந்திரா நகர் பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் ஸ்ரீ பால்சிங் என்பவரிடம், ராஜஸ்தானைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாமியார் வேடத்தில் வந்துள்ளார். தான் சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று இந்தியில் பேசி உரிமையாளரின் நம்பிக்கையைப் பெற்ற அந்த மூதாட்டி, தாகத்திற்குத் தண்ணீரும் பின் டீயும் கேட்டுள்ளார். மொழி மற்றும் மாநில அடையாளத்தைப் பயன்படுத்தி உரிமையாளருடன் நெருக்கமான உரையாடலைத் தொடங்கி, மெல்ல தனது மோசடித் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.
அந்த மூதாட்டி கடையிலிருந்த சாமி படத்தின் மீது இருந்த பூவை எடுத்து, அதனைத் தனது கைவரிசையினால் குங்குமமாக மாற்றிக் காட்டி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பின்னர் அந்தத் திலகத்தைக் கடையின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்த ஊழியர்களின் நெற்றியில் வைத்துள்ளார். திலகமிட்ட அடுத்த சில நிமிடங்களில், கடையில் இருந்தவர்கள் அந்த மூதாட்டியின் பேச்சைத் தட்ட முடியாமல், ஒருவித மயக்க நிலையில் அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மைகளாக மாறியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட மூதாட்டி, கடையின் கல்லா பெட்டியிலிருந்த 85 ஆயிரம் ரூபாய் பணத்தை லாவகமாக அபகரித்துள்ளார்.
மோசடியின் உச்சகட்டமாக, பணத்தை எடுத்துக் கொண்ட பிறகு தான் அவசரமாகப் பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என மூதாட்டி கூறியுள்ளார். அதனைக் கேட்டு கடையின் ஊழியர் ஒருவரே தனது இருசக்கர வாகனத்தில் அந்தப் பெண் சாமியாரை ஏற்றிச் சென்று பேருந்து நிலையத்தில் பத்திரமாக விட்டுவிட்டு வந்துள்ளார். அவர் சென்ற சிறிது நேரம் கழித்து சுயநினைவு பெற்று கல்லாவைப் பார்த்தபோதுதான், 85 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனது உரிமையாளர் ஸ்ரீ பால்சிங்கிற்குத் தெரியவந்தது. கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மூதாட்டி திலகமிட்ட பிறகு ஊழியர்களே பணத்தை எடுத்துக் கொடுக்கும் அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நூதன மோசடி குறித்து ஸ்ரீ பால்சிங் பொன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், இந்த மூதாட்டி சாமியார் வேடத்தில் சுற்றித் திரிந்து, குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி வந்த நபர்களைக் குறிவைத்துத் தனது “மாயாஜால” வித்தைகள் மூலம் தொடர்ந்து ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது. திலகமிட்டு வசியப்படுத்துவது போல் நடித்துப் பணத்தை அபேஸ் செய்த இந்தச் சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அந்த மர்ம மூதாட்டியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…