பாலா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1999 ஆம் ஆண்டு “சேது” திரைப்படத்தை இயக்கியதான் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றது மற்றும் தமிழ்நாடு மற்றும் தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. அதன் மூலம் பிரபலமானார் பாலா.
பாலாவின் படங்கள் எதார்த்தமாகவும் எளிமையாகவும் ஆழமான கருத்துக்களை கூறுவதாகவும் இருக்கும். அதே போல் மக்கள் மனதை கலங்கடிக்கும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட கதைகளை தான் அவர் தேர்ந்தெடுத்து இயக்குவார். எந்த நடிகரும் பாலாவின் இயக்கத்தில் நடித்து விட்டால் அது திருப்புமுனையாக இருக்கும் என்று கூறுவர்.
அப்படி தற்போது பாலா அருண் விஜயை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் “வணங்கான்“. இந்த திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. பாலாவின் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இருக்கிறது.
இந்த மேக்கிங் வீடியோவானது மிகவும் தனித்துவமானதாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பெரும்பாலானவைகள் லைவ் லொகேஷ்களில் எடுத்திருக்கிறார்கள். அருண் விஜயின் டெடிகேஷன் பாலாவின் படம் எடுக்கும் விதம் ஆகியவற்றை பார்த்து மக்கள் பாராட்டி வருகிறார்கள்.