புது வருஷத்தில் புது தொடக்கம்.. குடும்பத்துடன் சென்று புது கார் வாங்கிய நடிகர் ரமேஷ் திலக்…!

By Soundarya on தை 2, 2025

Spread the love

வாழ்வதற்காக சென்னை வந்து திரைத்துறையில் சாதித்து பெரிய இடத்திற்கு வந்தவர்கள் பலரும் உள்ளனர். அப்படி திரை உலகில் நடிக்கும் நடிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடிக்க பல தடைகளை தாண்டி வந்த நடிகர் தான் ரமேஷ் திலக். இயக்குனர் நலன் குமாரசாமி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகர் ரமேஷ். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

   

இவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றார். ரசிகர்களை வெகுவாக கவர்ந்த காக்கா முட்டை, டிமான்டி காலனி, மங்காத்தா மற்றும் உவமை கடவுளே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் முதலில் ரேடியோவில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் அதன் மூலம் படிப்படியாக உயர்ந்தார்.

   

 

இன்று காமெடியில் மற்றும் துணை கதாபாத்திரங்களில் அசத்தி வரும் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு நவலட்சுமி என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.  இவருடைய சம்பளம் சில லட்சங்களில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2025ஆம் வருடம் புத்தாண்டு தினத்தை பலரும் பலவிதமாக கொண்டாடிவரும் நிலையில் தன்னுடைய குடும்பத்தோடு ட்ரைவ் பண்ணி கொண்டாடியுள்ளார். புதிதாக ரமேஷ் டொயோட்டோ கார் வாங்கியா நிலையில் அவருடைய மனைவி மகனும் செம ஹாப்பியாக இருக்கிறார்கள். குடும்பத்தோடு கார் ஷோ ரூமில் தன்னுடைய மகன் கையில் அந்த பெரிய சாவி அட்டையை பிடித்துக் கொண்டிருக்கும் போட்டோவை தற்போது வெளியிட்டுள்ளார்.