#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கென தானி ராஜ்ஜியத்தை உருவாக்கிய சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் MGR.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் நடிகராக உயர்ந்தார். MGR படங்கள் என்றாலே சமூகநீதி கருத்துக்கள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். MGR படம் வெளிவந்தாலே ஹிட்தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் MGR.
தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR அரசியலில் களமிறங்கி போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக சிறப்பாக ஆட்சி நடத்தியவர் MGR.
MGR நல்ல மனிதர் உதவும் மனப்பான்மை கொண்டவர். ஆனால் எம்ஜிஆருக்கு இணையாக அந்த நேரத்தில் நகைச்சுவை நடிகராக புகழில் இருந்த எம் ஆர் ராதாவுக்கும் படப்பிடிப்பு தளத்தில் வசனங்கள் பேசுவதில் கருத்து மோதல்கள் ஏற்படும். இருவரும் நண்பர்களாக தான் இருந்தார்கள். ஒரு நாள் எம்ஜிஆர் வீட்டிற்கு வந்த எம் ஆர் ராதா பேசி கொண்டிருக்கும் போது வாக்குவாதம் முத்தி போய் எம்ஜிஆர் இன் கழுத்துலையே துப்பாக்கியால் சுட்டு விட்டார் எம் ஆர் ராதா.
அதற்குப் பிறகு எம்ஜிஆர் உயிர் பிழைப்பாரோ மாட்டாரோ என்று கூறி வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற்று திரும்பி வந்தார் எம்ஜிஆர். அவரின் குரல் மட்டும் பாதிக்கப்பட்டு விட்டது. இதற்குப் பிறகும் தன்னம்பிக்கையால் தன்னால் ஜெயிக்க முடியும் என்று பல வெற்றி படங்களில் அந்த குரலோடு நடித்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆருக்கு அதிகப்படியான நல்ல ஹிட் பாட்டுகளை எழுதிக் கொடுத்தவர் வாலி. வாலி எம் ஜி ஆர் காக எழுதும் பாடல்கள் அனைத்திலும் எம்ஜிஆரின் குணங்களை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கும். அவரது குணம் அரசியல் பின்புலம் எல்லாவற்றையும் வைத்து தான் வாலி எழுதுவார். ஆனால் எம்ஜிஆர் ஒருமுறை கடை அப்படி எனக்கு எழுதி கொடுங்கள் என்று கேட்டதில்லை. இதை வாலியே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அதுபோல குண்டடி பட்டு உடல் தேறிய பிறகு எம்ஜிஆர் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் எங்கள் தங்கம். அந்தப் படத்தில் அவரது நிஜ சிட்டுவேஷனை வைத்து படத்தில சிட்டுவேஷன் வைத்து வாலி நான் செத்துப் பிழைச்சவன்டா என்ற பாடலை எழுதியிருக்கிறார். இதுபோல படங்களை வாலியால் தான் எழுத முடியும் என்று எம்ஜிஆர் பாராட்டி இருக்கிறார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…