Categories: சினிமா

பாட்டு எழுதி கொண்டு வருவார் என்று நம்பிய MSV… வாய்ப்பளித்தவரையே கைவிட்ட வாலி…

Spread the love

கவிஞர் வாலி தமிழ் சினிமாவில் பணியாற்றிய புகழ்பெற்ற பாடல் ஆசிரியர் ஆவார். ரங்காராஜன் என்ற இயற்பெயரை கொண்ட வாலி திருச்சி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதை தொகுப்புகள் மிகவும் புகழ்பெற்றவை ஆகும்.

சிறுவயதில் இருந்து எழுத்தில் மீது ஆர்வம் கொண்டிருந்த வாலி தனது நண்பர்கள் துணையுடன் நேதாஜி என்ற கையெழுத்து பத்திரிகை துவங்கி நடத்தினார். அதன் முதல் பிரதியை கல்கி வெளியிட்டார். திருவரைங்கத்தில் வாலி நடத்திய கையெழுத்து பத்திரிக்கையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக்கொண்டனர். அப்படி பங்கேற்றுக் கொண்டவர்களில் புகழ்பெற்றவர் தான் சுஜாதா.

கவிஞர் வாலி எம் ஜி ஆர் சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பல வெற்றி பாடல்களை எழுதி இருக்கிறார். குறிப்பாக எம்ஜிஆரின் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் வாலி தான். அன்றைய காலகட்டத்தில் அரசியலிலும் சினிமாவிலும் எம்ஜிஆர் இருந்ததால் இரண்டையும் சம்பந்தப்படுத்தி அவரது பாடல்களில் வார்த்தைகள் இருக்க வேண்டும் என்று விரும்புவார் எம்ஜிஆர். அவர் என்ன மனதில் நினைக்கிறாரோ அதை அப்படியே வார்த்தைகளில் எழுதி விடுவார் வாலி. எம்ஜிஆரின் மீது அதீத அன்பு கொண்டிருந்தார் வாலி.

வாலியின் திறமையை பார்த்து சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்பைக் கொடுத்தவர் எம்எஸ் விஸ்வநாதன். MSV இசையில் பல திரைப்படங்களுக்கு வாலியை தான் சிபாரிசு செய்வார். அப்படி வாலி மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தவர் MSV. ஒருமுறை எம்.எஸ்.வி வைத்த நம்பிக்கையை வாலி உடைத்துவிட்டார். அது என்ன சம்பவம் என்பதை பற்றி இனி காண்போம்.

எம்ஜிஆர் நடித்த திரைப்படம் அன்பே வா படத்திற்கு கவிஞர் வாலியை பாடல் எழுத சொல்லியிருந்தார் MSV. அப்போது பாடலின் ஆரம்பம் மெட்டு மட்டும் போட்டு கொடுத்து பாடல் எழுதுமாறு வாலியிடம் கூறியிருக்கிறார் MSV. வாலி எப்படியும் பாடல் எழுதி கொண்டு வந்துருவார் என்று அந்த பாடலுக்கு முழு மெட்டையும் போட்டு முடித்துவிட்டார் MSV. ஆனால் வாலி வெறுங்கையோடு வந்து உங்களுடைய மெட்டுக்கு என்னால் பாடல் எழுத முடியவில்லை வார்த்தைகள் வரவில்லை என்று கூறியிருக்கிறார். சற்று ஏமாற்றம் அடைந்த எம்.எஸ்.வி. சரி பரவாயில்லை நாம் புது மெட்டு போட்டுக் கொள்ளலாம் என்று புது மெட்டை உருவாக்கி இருக்கிறார். அப்படி வந்த பாடல் தான் அன்பே வா. இந்த பாடல் மிகப் பிரபலமாக ஆனது.

admin

Recent Posts

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

3 minutes ago

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

17 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

22 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

28 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

31 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

35 minutes ago