“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில் இணைந்து சாதனை படைத்த இளைஞர் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது கடின உழைப்பால் இலக்கை எட்டிய அந்த இளைஞருக்கு இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், ராணுவச் சீருடை அணிந்த இளைஞர் ஒருவர் தனது கடந்த கால வலிகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் கூறுகையில், “நான் ஒரு முஸ்லிம் என்பதால், எனது கிராமத்தில் உள்ளவர்கள் என்னை ‘பாகிஸ்தானி’ என்று அழைத்து கிண்டல் செய்வார்கள். முஸ்லிம்கள் ராணுவத்தில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும், உன்னால் அதில் சேரவே முடியாது என்றும் கூறி மனதைக் காயப்படுத்தினார்கள்” எனத் தனது பழைய நினைவுகளைக் கூறி கண்கலங்குகிறார்.
அனைத்துத் தடைகளையும், அவமானங்களையும் தாண்டி இந்திய ராணுவத்தில் தேர்வாகி சாதனை படைத்த அந்த இளைஞர், “இன்று நான் சாதித்துக் காட்டிவிட்டேன்” எனப் பெருமிதத்துடன் கூறுகிறார். இது ஏதோ ஒரு பாராட்டு விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவாகத் தெரிகிறது. அந்த இளைஞரின் வெற்றியை அங்கிருந்த பலரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்த வீடியோவைப் பார்த்த லட்சக்கணக்கான இணையவாசிகள் அந்த இளைஞருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, தேசப்பற்றுக்கு மதம் கிடையாது எனப் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் அரசியலில் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட ஆலோசித்து…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், பருவகால பட்டியல் எழுத்தர்கள் மற்றும்…
சேலத்தில் பிரபல ரவுடி ஜங்ஷன் டேவிட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளான 7 பேர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில்…
சமீபகாலமாகத் தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் சொற்போர்களும் விமர்சனங்களும் தீவிரமடைந்து…
திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த நடிகர் தனுஷ், விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவது உறுதி என்று அதிமுக மூத்த…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள்…