ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. காதலர்களுக்கு இடையேயான காதல் உணர்வை அதிகரிக்க செய்வதில் சினிமாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கக்கூடிய சினிமா மூலமாகவே ஏராளமான காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு இன்று தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படி சினிமாவில் ரீல் ஜோடிகளாக இருந்து அதன் பிறகு ரியல் லைஃபில் ஜோடிகளாக மாறிய சினிமா பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அஜித் ஷாலினி!
சினிமாவில் காதல் ஜோடி என்றாலே அனைவருடைய நினைவுக்கும் முதலில் வருவது அஜித் ஷாலினி ஜோடி தான். அமர்க்களம் திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்த போது காதல் மலர்ந்த நிலையில் இருவரும் காதலித்து கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணத்திற்கு பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.
சுந்தர் சி – குஷ்பு:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக 90களில் ஒரு கலக்கு கலக்கிய நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து வந்த நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமா மற்றும் அரசியல் என குஷ்பூ கலக்கி கொண்டிருக்கிறார்.
சூர்யா ஜோதிகா:
கோலிவுட்டியில் அதிகம் கொண்டாடப்படக்கூடிய நட்சத்திர ஜோடிகளில் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்த போது காதல் மலர்ந்த நிலையில் அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
பாக்யராஜ் பூர்ணிமா:
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் பாக்கியராஜ் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் என பல திறமையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தன்னுடன் நடித்த நடிகை பூர்ணிமாவை காதலித்த திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சினேகா பிரசன்னா:
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று அனைவராலும் கொண்டாடப்படும் சினேகா கடந்த 2007 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்த போது பிரசன்னா மீது காதல் மலர்ந்தது. ஐந்து வருட காதலுக்கு பிறகு இந்த ஜோடி கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நயன்தாரா விக்னேஷ் சிவன்!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக அனைவராலும் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். அதன் பிறகு எட்டு வருட காதலுக்கு பின்னர் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
ஆதி நிக்கி கல்ராணி:
மரகத நாணயம் திரைப்படத்தில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த நிலையில் அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து உள்ளது. அதன் பிறகு சில வருடங்கள் ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடியை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
சித்தார்த் அதிதி ராவ்:
பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சித்தார்த். இவர் தெலுங்கு படத்தில் நடித்த போது அதிதி ராவை காதலிக்க தொடங்கிய நிலையில் பல வருடம் ரகசியமாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஆர்யா – சாயிஷா:
தமிழ் சினிமாவில் கஜினிகாந்த், காப்பான் மற்றும் டெடி ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்த நடிகை சாய்ஷா உருகி உருகி காதலித்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் திருமணத்திற்கு பிறகும் சாய்ஷா தொடர்ந்த படங்களில் நடித்து வருகிறார்.