ஓ மை கடவுளே என்ற வெற்றி படத்தை இயக்கியவர் தான் அஸ்வத் மாரிமுத்து. இவர் தன்னுடைய அடுத்த படைப்பாக டிராகன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் கோமாளி மற்றும் லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரதிப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் கையாடு லோஹர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் ஜார்ஜ் மரியன், கே எஸ் ரவிக்குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவரும் இணைந்து கதை எழுதியுள்ளனர்.

முதலில் காதலர் தினத்தன்று இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் விடா முயற்சி திரைப்படம் வெளியிட்டால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அதன் பிறகு இந்த படம் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் டிராகன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், டிராகன் படத்தில் முத்த காட்சி வேண்டாம் என்று அஸ்வத் மற்றும் விக்கி இருவரிடமும் நான் முதலில் சொன்னேன். குடும்பமா எல்லாரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதால் முத்த காட்சி வேண்டாம் என்று கூறினேன்.

அதற்கு உடனே விக்கி, அனிமல் படம் பாத்தீங்களா, அந்தப் படத்துல நிறைய முத்த காட்சி இருந்தது. படத்தோட கலெக்ஷன் மட்டுமே 800 கோடி. குடும்பங்கள் அந்த படத்தை பார்க்காம தான் அவ்வளவு கலெக்ஷன் பண்ணுச்சா. இப்ப இருக்கவங்க எல்லாரும் இது மாதிரி காட்சிகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பிச்சுட்டாங்க என்று விக்கி கூறினார். அதனைப் போலவே அவ்வளவு பெரிய நடிகர் விஜய்யின் லியோ படத்தில் கூட முத்த காட்சி இருந்தது.

அதையும் குடும்பம் குடும்பமாக சென்று பார்த்த மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்று சில படங்களை உதாரணத்திற்கு கூறி விக்னேஷ் சிவன் என்னிடம் பேசினார். அவர் கூறிய அந்த விஷயம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் கதைக்கு இந்த காட்சியை முக்கியமா என்று யோசித்தது மட்டுமல்லாமல் முகம் சுளிக்கும்படி இருக்குமா என்றும் யோசித்தேன். அதனால் ஒரு காதல் காட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு தான் அந்த முத்தக் காட்சியும் ஓரளவுக்கு எடுத்தோம். அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று பிரதீப் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
