எங்க அம்மா இறந்த போது கூட நான் தூங்கிட்டு தான் இருந்தேன்.. பழம்பெரும் நடிகை லட்சுமி ஓபன் டாக்..!

By Nanthini on மாசி 14, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான  லட்சுமி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தாயார் குமாரி ருக்மணி தமிழ் சினிமாவில் நடித்த நடிகை ஆவார் மற்றும் அவரது தந்தை யாரகுடிபாடி வரதராவ் தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் எடிட்டர் ஆவார். மேலும் லட்சுமி அவர்களின் தந்தை நடிகராக தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். தனது தாய் மற்றும் தந்தையர் சினிமா துறையை சார்ந்ததால் லட்சுமி அவர்களுக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தது. லட்சுமி 1970களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல பக்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் லட்சுமி.

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகை!.. மீண்டும் பார்க்க முடியுமா?.. அந்த  செயலை செய்வார்களா இயக்குனர்கள்?..

   

தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார் லட்சுமி. தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் லட்சுமி. லட்சுமி தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் சின்னத்திரை தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பேச்சாளராகவும் இருந்துள்ளார். சின்னத்திரையில் தமிழ் பேச்சு நிகழ்ச்சியான அச்சமில்லை அச்சமில்லை உட்பட இரண்டு பேச்சு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் லட்சுமி. தனது நடிப்பிற்காக 10 ஃபிலிம்பேர் விருதுகள், ஒரு தேசிய திரைப்பட விருது, ஒரு சினிமா எக்ஸ்பிரஸ் விருது, நான்கு நந்தி விருதுகள், மூன்று கர்நாடக மாநில திரைப்பட விருதுகள், ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, ஒரு கேரள மாநில திரைப்பட விருது, ஒரு பெங்காலி திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார் லட்சுமி.

   

Actress Lakshmi Opens Up About Spreading Death Rumour about Her | Actress  Lakshmi: 'நான் உசுரோடுதான் இருக்கேன்; இன்னும் சாகல.. கொந்தளித்த பிரபல நடிகை..  காரணம் என்ன?

 

இப்படியான நிலையில் நடிகை லட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டியில், என்ன பொறுத்த வரைக்கும் என்னுடைய வாழ்க்கையில் தூக்கம் என்பது ரொம்ப முக்கியம். பொதுவாகவே இரவு நேரத்தில் எந்த ராஜா என்ன பட்டினம் போனாலும் பத்திலிருந்து 10.30 மணிக்குள் நான் தூங்கி விடுவேன். என்னவாக இருந்தாலும் சரி நான் என்னுடைய தூக்கத்தை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். யாராவது இறந்து விட்டால் கூட நான் தூங்கிட்டு அப்புறமா வந்து அழுதுகிறேன் என்று தான் சொல்லுவேன். அப்படிதான் என்னுடைய அம்மா இறந்த சமயத்தில் என்னுடைய பெரியப்பா சித்தப்பா பசங்க எல்லாரும் இருந்தாங்க.

நான் இறந்துட்டேனா? வேலை வெட்டி இல்லாமல் கிளப்பி விடுறாங்க- நடிகை லக்‌ஷ்மி  ஆவேசம் | Tamil cinema actress lakshmi explained various rumours about she  passed away

நான் தூங்க போறேன்னு சொன்னதும் அவங்க எல்லாரும் என்ன திட்டுனாங்க. எங்க அம்மா உங்க கிட்ட சொன்னாங்களா நான் தூங்க கூடாதுன்னு நான் போய் தூங்கிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் என்று சொல்லிட்டு கிளம்பினேன். எங்க அம்மா பக்கத்துல போய் அம்மா உனக்கே என்ன பத்தி நல்லா தெரியும் நான் போய் கொஞ்ச நேரம் தூங்கிட்டு அப்புறமா வந்துடுறேன் என்று சொல்லிட்டு போய் நல்லா தூங்கினேன். நான் தூங்க வேண்டும் என்று முடிவு பண்ணிட்டா காதுக்குள்ள டமாரம் அடிச்சா கூட நான் அதைக் கேட்காத மாதிரி தூங்கிட்டு தான் இருப்பேன் என்று லட்சுமி பேசியுள்ளார்.