மணிரத்னம் கூட அவரை வச்சு படம் எடுத்தாரு… ஆனா நான் கடைசி வரை போகல – மார்தட்டி சொன்ன டி ராஜேந்தர்!

By vinoth on மாசி 14, 2025

Spread the love

டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர். அவரது அடுக்குமொழி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. சிறந்த பேச்சுத்திறமை கொண்ட டி.ராஜேந்தர் மனதில் பட்டதை பொதுவெளியாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். ஆதலால் சில நேரங்களில் அவர் பேசியது சர்ச்சையை உண்டு செய்துவிடும்.

ஒரு தலை ராகம் என்ற படம் மூலமாக அறிமுகம் ஆன டி ராஜேந்தர் அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.தொடக்கத்தில் திரைப்படங்களை இயக்கி, பாடல்கள் எழுதி, இசையமைத்து, ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கத்தை மேற்கொண்ட  அவர் உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து தன் படங்களில் தானே கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

   

ரஜினி, கமல் போன்றோருக்கான மாஸ் ஆடியன்ஸ்கள் இருப்பது போலவே டி ஆருக்கும் தனியான ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக அவருக்கு மிக அதிக எண்ணிக்கையில் பெண் ரசிகைகள் இருந்தார்கள். அவரின் அந்த காலத்து கதைகள் பல இப்போது சீரியல்களாக எடுக்கப்பட்டு ஹிட்டடித்து வருகின்றன.

   

 

டி ராஜேந்தர் சினிமாவில் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் தனக்கென்று ஒரு ஸ்டைலை வைத்திருந்தார். அவர் இயக்கும் படங்களில் அவரே இசையமைத்து பாடல்கள் எழுதுவார். அதே போல ஒரு குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமே அவர் படத்தில் நடிப்பார்கள். பெரும்பாலும் கதாநாயகிகள் புதுமுகங்களாக இருப்பார்கள். டி ராஜேந்தர் பிஸியாக இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் கவுண்டமணிதான் தமிழ் சினிமாவின் காமெடி கிங்.

கிட்டத்தட்ட எல்லா இயக்குனர்களும் அவரை தங்கள் படத்தில் நடிக்கவைப்பார்கள். ஆனால் டி ராஜேந்தரின் ஒரு படத்தில் கூட கவுண்டமணி நடிக்கவில்லை. இதுபற்றி முன்பு ஒரு நேர்காணலில் பேசிய டி ஆர் “மணிரத்னம் கூட பகல் நிலவு படத்தில் கவுண்டமணியை தேடிப் போனார். ஆனால் நான் கடைசி வரை கவுண்டமணியிடம் செல்லவில்லை” என பெருமிதமாகப் பேசியுள்ளார்.