Categories: சினிமா

புஷ்பா புருஷன் மாதிரி தான் விக்னேஷ் சிவனும்.. எங்க கிட்ட நிறைய சீக்ரெட் இருக்கு.. வலைப்பேச்சு பிஸ்மி போட்டுடைத்த உண்மை..!

Spread the love

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் ஆவணப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நயன்தாராவின் முதல் படம் முதல் கடைசி படம் வரை அனைத்து காட்சிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. அதன்படி விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சில காட்சிகளை இப்படத்தில் இணைத்திருந்தனர். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் தனது உரிமை இல்லாமல் எப்படி படத்தின் காட்சிகளை நீங்கள் இணைக்க முடியும் என்று கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இப்படியான நிலையில் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் நயன்தாரா செய்தது தான் தவறு என்று தனுஷ் மீது தவறு இல்லை என வலைப்பேச்சு அந்தணன் மற்றும் பிஸ்மி ஆகியோர் பேசியதால் நடிகை நயன்தாராவுக்கு அவர்கள் மீது கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கெட்டதை பார், கெட்டதை கேள், கெட்டதை மட்டுமே பேசு என்று சொல்லும் மூன்று மோசமான குரங்குகள் சினிமா கிசுகிசுக்களை பற்றி பேசியே வயிற்றை வளர்த்து வருகிறார்கள் என்று நயன்தாரா வலைப்பேச்சு டீமில் உள்ள அந்தணன், மிஸ்மி மற்றும் சக்திவேல் உள்ளிட்ட மூவரையும் நேரடியாக விமர்சித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த விமர்சனங்களுக்கு வலைப்பேச்சு பிஸ்மி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நயன்தாரா பற்றி நாங்கள் அவ்வளவு அதிகமாக வீடியோ போட்டது கிடையாது. தனுஷ் விவகாரம் வந்த பிறகு தான் ஒரு சில நெகட்டிவ்வான வீடியோக்களை போட்டோம். இருந்தாலும் அது எல்லாமே உண்மைதான்.

நயன்தாரா எங்களை மூன்று குரங்குகள் என்று தாக்க காரணம் நயன்தாரா பற்றி நிறைய மறைக்கப்பட்ட உண்மைகள் எங்களுக்கு தெரியும் என்பதால்தான். ஒருவேளை அந்த சம்பவங்களை நாங்கள் வெளியில் கூறி விடுவோம் என்ற பயத்தில் தான் அவர் அப்படி பேசியுள்ளார். நயன்தாராவின் கணவர் என்பதுதான் விக்னேஷ் சிவனுக்கு அடையாளம். ஒரு படத்தில் புஷ்பாவின் கணவர் என்று சொல்வது போல நயன்தாராவின் கணவர் என்று சொல்வது தான் அவருக்கு அடையாளமாக உள்ளது. நயன்தாரா சம்பாதித்த நிறைய படங்களை தற்போது பல பிசினஸ்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இது ஒரு வகையில் நல்லது தான். கடைசி வரைக்கும் சினிமா சோறு போடும் என்று சொல்ல முடியாது.

ஆனால் சமீபத்தில் பாண்டிச்சேரியில் ஒரு அரசு ஓட்டலை விக்னேஷ் சிவன் வாங்குவதாக தகவல் வெளியாகி இருந்தது. இது ஒரு தவறான செயல்தான். அரசு சொத்தை வாங்க நினைப்பது மிகப் பெரிய முட்டாள்தனம். இதைத் தெரிந்தும் ஏன் அவர் செய்கிறார் என தெரியவில்லை. பணம் இருக்கவங்க எல்லாம் அறிவாளியாக முடியாது, அறிவாளி கையில எல்லாம் பணம் இருக்காது என்று ஒரு பழமொழி உள்ளது. குறுக்கு வழியில் சென்று அரசு சொத்தை வாங்க நினைப்பது மிகப்பெரிய தவறு என்று விக்னேஷ் சிவனை பிஸ்மி விமர்சித்துள்ளார்.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

3 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago