#image_title
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கிறது. ஏகப்பட்ட நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் முன்னணியாக வந்திருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். உதாரணமாக ஜே ஜே படத்தில் நடித்த நடிகை தாமிரபரணி படத்தில் நடித்த பானு போன்றோர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஈஷா டியோல். தற்போது இவர் என்ன செய்கிறார் என்பது பற்றி இனி காண்போம்.
ஈஷா தியோல் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் இந்தி மொழி திரைப்படங்களில் நடிக்கிறார். தர்மேந்திரா மற்றும் ஹேமமாலினி ஆகிய நட்சத்திர தம்பதிகளில் மகள் தான் ஈஷா டியோல். 2002 ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் ஈஷா டியோல். 2004 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கி சூர்யா மாதவன், சித்தார்த் மீரா ஜாஸ்மின் த்ரிஷா ஆகியோர் நடித்த ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஈஷா டியோல்.
இந்தத் திரைப்படம் அந்த நேரத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஈஷா டியோல் நடித்திருக்கிறார். இந்த படத்தில் வரும் உண்மை சொன்னால் நேசிப்பாயா என்ற பாடல் கூட பிரபலமாக ஆனது. தற்போது இந்தி திரையுலகில் கவனம் செலுத்தி கொண்டிருக்கும் ஈஷா டியோல் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தனது அபாரமான நடிப்பிற்காக பிலிம்பேர் விருதுகள் IIFA விருதுகள் போன்ற பல விருதுகளை வென்று இருக்கிறார் ஈஷா டியோல். 2012 ஆம் ஆண்டு பாரத் தக்தானி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஈஷா டியோலுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த வருடம் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக அறிவித்தனர். தனது முழு கவனத்தையும் சினிமாவின் மீது செலுத்தி வருகிறார் ஈஷா டியோல்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த அரசியல் களமும் காத்திருக்கிறது.…
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய…
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நெருக்கடியை இந்தியா…
தென்னிந்திய திரையுலகின் எவர்கிரீன் நாயகி த்ரிஷா, தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களுடன் மிகுந்த நெருக்கத்துடன்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச்…