18 வயதில் World Chess Champion பட்டத்தை வென்ற தமிழக சிறுவன்… யார் இந்த குகேஷ் தொம்மராஜு…?

Spread the love

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் குகேஷ் தொம்மராஜூ. இவரது தந்தை ரஜினிகாந்த் ENT அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் இவரது தாயார் பத்மா மைக்ரோ பயாலஜிஸ்ட் ஆவார். குகேஷ் தனது 7 வயதிலிருந்து செஸ் விளையாட தொடங்கி இருக்கிறார். சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவில் படித்தார் குகேஷ்.

2015 ஆம் ஆண்டு குகேஷ் ஒன்பது வயதுக்கு உட்பட்ட ஆசிய பள்ளிகளின் சதுரங்க போட்டியில் வென்றார். 2018 ஆம் ஆண்டு 12 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் வெற்றி பெற்றார். அதோடு 2018 ஆம் ஆண்டு ஆசிய இளையோர் செஸ் போட்டியில் 12 வயதிற்குட்பட்டவரான தனிநபர் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றார்.

2019 ஆம் ஆண்டு குகேஷ் 12 வயதில் இருக்கும் போது வரலாற்றில் இரண்டாவது இளைய சாம்பியனாக ஆனார். 2021 ஆம் ஆண்டு யூனியஸ் பெயர் சேலஞ்ச்சர் சுற்றில் வெற்றி பெற்றார். 2022 ஆம் ஆண்டு குகேஷ் 44 ஆவது செஸ் ஒலிம்பியாடு போட்டியில் பதக்கத்தை வென்றார். 2023 ஆம் ஆண்டு தரவரிசை பட்டியலில் குகேஷ் 2750 மதிப்பீட்டை எட்டிய இளம் வீரரானார். 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையின் மூலம் வேட்பாளர் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் முகேஷ். இதன் மூலம் பாபி பிஷேர் மாக்னஸ் கார்ல்சன் ஆகியோருக்கு பிறகு வேட்பாளர் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளைய வீரராக பெருமை பெற்றார் குகேஷ்.

ஜனவரி 2024 ல் குகேஷ் tata ஸ்டீல் செஸ் போட்டியில் பங்கேற்று 13 ஆட்டங்களில் 8.5 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்தார். பின்னர் பல போட்டிகளில் கலந்து கொண்ட குகேஷ் 2024 நவம்பரில் நடந்த உலக வாகையாளர் போட்டியில் திங் லிரேனுடன் விளையாடும் தகுதி பெற்றார்.

உலக சதுரங்க வகையாளர் போட்டியில் விளையாடிய இளம் வீரர் முகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 டிசம்பர் மாதத்தில் குகேஷ் திங் லிரேனை வெற்றி கொண்டு உலக சதுரங்க வகையாளர் போட்டியில் 7.5- 6.5 புள்ளிகளில் வெற்றி பெற்று 18 வது உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ். இளம் வயதில் இருந்து இவர் செய்த சாதனைகள் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும் இன்றைய இளம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறார் குகேஷ்.

admin

Recent Posts

“இந்தியாவில் ‘ஜாம்பி’ ஊடுருவல்?… இளைஞர்களை நடைப்பிணமாக்கும் அந்த கொடூர போதை… நெஞ்சை பதறவைக்கும் காட்சி”…!!!

இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக, 'ஜாம்பி டிரக்' போன்ற…

8 minutes ago

“வெளியே உன் கார் நிக்குதுடா” பொய் சொன்ன காதலனை நடுரோட்டில் வைத்து… ஹோட்டல் ரூமில் காதலன் செய்த ‘அந்த’ காரியம்…!!

நள்ளிரவு 12 மணி இருக்கும், தன் காதலனிடம் ஏற்பட்ட மனக்கசப்பிற்காக மன்னிப்பு கேட்க எண்ணிய ஒரு இளம் பெண், நேராக…

12 minutes ago

நிஜமாகவே அவர் ஆம்பளதானா..? “ஒரு வருஷமா என்ன தொடக்கூட இல்ல” ரகசிய கேமரா வைத்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோலாகலமாக நடந்த ஒரு திருமணம், தற்போது…

18 minutes ago

இரட்டை குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் பறிபோன உயிர்… தவறான ஊசியால் துடிதுடித்த தாய்.. தனியார் மருத்துவமனையின் பகீர் அலட்சியம்..!!

டெல்லி படேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே 35 வயதான ஷிவாங்கி…

25 minutes ago

“இதெல்லாம் ஒரு பொழப்பா?”… தந்தையின் ஜீப்… மகனின் குத்தாட்டம்!… போலீஸ் ஜீப்பில் ஆடிய இளைஞருக்கு காத்திருந்த ட்விஸ்ட்… ஒரு ரீல்ஸால் சிதைந்த கனவு…!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், காவல்துறை சீருடையைத் தவறாகப் பயன்படுத்திய இளைஞர் ஒருவரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஹாதேய்…

26 minutes ago

“செத்தாலும் என் புள்ளையை விடமாட்டேன்” ஆற்றில் மகனை நெஞ்சோடு சேர்த்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்.. கலங்கும் இணையதளம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு படகு விபத்தில், உயிரிழந்த தாய் மற்றும் மகனின் உடல்கள் ஒன்றையொருவர் இறுக்கமாகக்…

32 minutes ago