CINEMA
முடிஞ்சா உன் குழந்தை மேல சத்தியம் பண்ணு.. நடிகர் யோகி பாபுவுக்கு சவால் விடும் மூன்று முக்கிய புள்ளிகள்..!!
பிரபல நடிகரான யோகி பாபு, தில்லாலங்கடி, வேலாயுதம், மான் கராத்தே, அரண்மனை, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வலைப்பேச்சு யூடியூப் சேனலை நடத்தி வரும் அந்த நன் பிஸ்பி ஆகியோர் யோகி பாபு ஒரு சில இயக்குனர்களுக்கு தொந்தரவு அளிப்பதாக பேசி இருந்தார்கள். மேலும் அதனை சம்பந்தப்பட்ட இயக்குனர்களே வலைப்பேச்சு சேனலில் கூற சொன்னார்களாம். மேலும் டப்பிங் முடியும் வரை தங்களது பெயரை கூற வேண்டாம் என இயக்குனர்கள் சொல்லியதாக கூறினர். இதனை அறிந்து யோகி பாபு சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் வலைப்பேச்சு சேனல் பற்றி பேசினார்.
வலைப்பேச்சு சேனலில் இருப்பவர்கள் தங்களை கவனிக்க சொல்லுங்கள். கவனித்தால் தான் இந்த மாதிரி இனிமேல் பேச மாட்டோம் என கூறியதாக யோகி பாபு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன், பிஸ்மி ஆகியோர் யோகி பாபுவின் பேச்சால் கோபமடைந்து அவருக்கு சவால் விடுக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், நாங்கள் பேசிய ஆதாரம் இருந்தால் யோகி பாபு அதனை வெளியே விடட்டும். அப்படி ஒரு ஆதாரம் இருக்க வாய்ப்பே இல்லை.
அவர் தீவிர முருகர் பக்தர் தானே. இதனால் குடும்பத்துடன் யோகி பாபுவை திருத்தணிக்கு வர சொல்லுங்கள். நாங்களும் வருகிறோம்m திருத்தணி முருகன் மீது சத்தியம் பண்ண சொல்லுங்கள். நாங்கள் காசு கேட்டோமா? இல்லையா? என்று. வரும்போது அவரது குழந்தையையும் அழைத்து வர சொல்லுங்கள். அந்த குழந்தை மீதும் சத்தியம் பண்ண சொல்லுங்கள். நாங்களும் எங்கள் குழந்தைகளின் மீது சத்தியம் பண்ணுகிறோம். இப்படி வாய் கூசாமல் யோகி பாபு ஏன் பொய் சொல்கிறார் என அந்த அண்ணன் கூறியுள்ளார். மேலும் பார்ட்னர் என்ற ஒரு திரைப்படத்தில் காசு வாங்கிக் கொண்டு யோகி பாபு நடிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார்.
அந்த செய்தி எங்களுக்கு தெரியும். ஒரு நாளைக்கு 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் யோகி பாபு ஐந்து லட்ச ரூபாய் மட்டும் தான் கணக்கு காட்டுகிறார். மீதி உள்ள 20 லட்சத்தை கருப்பு பணமாக தான் வாங்குகிறார். அதை சொன்னால் அவரது தொழில் பாதித்துவிடும் என்று நாங்கள் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. இனிமேலும் நாங்கள் சொல்லாமல் இருக்க முடியாது. இது மட்டும் இல்லாமல் என்னை ஒரு பிரபல நடிகர் டோன்ட் டச் என கூறினார் என யோகி பாபு புலம்பினார்.
பத்திரிக்கை தர்மத்தின் படி அந்த செய்தியை மட்டும் சொல்லி அந்த நடிகரின் பெயரை நாங்கள் சொல்லவில்லை. ஆனால் இனிமேல் அதை மறைக்க மாட்டோம். அஜித் தான் தன்னை மோசமாக நடத்துகிறார் என்று யோகி பாபு எங்களிடம் கூறினார். யோகி பாபுவின் காமெடி நன்றாகவே இல்லை. நீங்கள் ஒரு காமெடி நடிகரும் கிடையாது. தமிழ் சினிமா பல திறமையானவர்களை கோபுரத்தில் வரும் வைக்கும். சில நேரங்களில் குப்பைகளும் கோபுரத்தில் போய் ஒட்டுக்கொள்ளும். அப்படிப்பட்ட ஒரு குப்பைதான் யோகி பாபு என தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.