CINEMA
முதல் படம் ஹிட்… பின்னர் காணாமல் போன 5 தமிழ் நடிகைகள்…
தமிழ் சினிமாவில் பல நாயகிகள் அறிமுகமாகி கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலரே நீடித்து தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்து பிரபலமாக இருக்கிறார்கள். ஆனால் பலர் காணாமல் போயிருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமே ஹிட்டாகி அந்த படத்தின் மூலம் பிரபலம் ஆகி பின்னர் காணாமல் போன ஐந்து தமிழ் நடிகைகள் யார் யார் என்பதை பற்றி இனி காண்போம்.
1. கிரண் ரத்தோட்
கிரண் ரத்தோட் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்து அறிமுகமான திரைப்படம் ஜெமினி. இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இவர் தமிழ் சினிமாவில் எங்கேயோ போய்விடுவார் என்ற நினைத்த வேளையில் வேகமாக ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பின்னர் காணாமல் போய்விட்டார். தற்பொழுது ஒரு நேர்காணலில் அவரே கூறி இருப்பார் நான் காதலில் விழுந்தேன். காதலித்ததால் என் கேரியர் போய்விட்டது என்று அவரே கூறியிருக்கிறார்.
2. ரீமா சென்
ரீமாசென் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மற்றும் மாடல் அழகியுமாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் 2001 ஆம் ஆண்டு மின்னலே என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான ஃபிலிம்பேர் விருதினை வென்றார் ரீமாசென். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே காணாமல் போய்விட்டார். ரீமா சென் தற்போது ஒரு தொழிலதிபரை மணந்து சினிமாவை விட்டேவிலகி விட்டார்.
3. ஷெரின்
ஷெரின் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்த பிரபல நடிகை ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் பேரும் புகழும் பெற்ற ஷெரின், ஏனோ நல்ல கதையம்சம் இல்லாத படங்களினால் காணாமல் போய்விட்டார். வெகு நாட்களுக்கு பிறகு பிக் பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியில் கம்பேக் கொடுத்த ஷெரின் தற்போது பட வாய்ப்புகள் வருவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.
4. கேத்தரின்
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடிக்கும் நடிகையாவார். 2014 ஆம் ஆண்டு மெட்ராஸ் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கேத்தரின். மெட்ராஸ் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக அனைவரின் பாராட்டையும் பெற்ற கேத்தரின் அதற்கு பிறகு தமிழ் படங்களில் அவர் பெரிதாக தோன்றவே இல்லை.
5.ரித்திகா சிங்
ரித்திகா சிங் குத்துச்சண்டை வீரர் மற்றும் நடிகை ஆவார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு இறுதி சுற்று என்ற திரைப்படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்திருப்பார் ரித்திகா சிங். இவர் தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடிகையாவார். குத்துச்சண்டை வீரராக இருந்து நடிகையாக வந்ததால் இவருக்கு என்று ஒரு தனி பெயர் இருந்தது. ஆனால் என்னவோ தற்போது ரித்திகா சிங் சில சிறிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.