CINEMA
எனக்கு இந்த மாதிரி பெயர் வச்சது அவர்தான்… நினைவுகளை பகிர்ந்த சார்லி…
சார்லி தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், குணச்சித்திர நடிகர், துணை மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவரின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர் என்பதாகும். இவர் கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்தவர். படிக்கும் போதே எம்ஜிஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், நாகேஷ் ஆகியோரின் பின்பற்றி அவர்களைப் போலவே நடிப்பாராம் சார்லி.
சார்லி ஒரு பிரபலமான மேடை கலைஞர் ஆவார். அதே நேரத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பாடல் மற்றும் நாடகப் பிரிவில் ஒரு கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 6 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியுள்ளார் சார்லி. இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் வாய்ப்பினை பெற்ற சார்லி, பாலச்சந்தர் இயக்கி 1983 ஆம் ஆண்டு வெளியான பொய்க்கால் குதிரை. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சார்லி.
நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சார்லி. சார்லி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றவர். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் எளிதில் சிரிக்க வைத்து விடுவார் சார்லி.
பூவே உனக்காக, பிரண்ட்ஸ், வெற்றிக்கொடிகட்டு, உன்னை நினைத்து என பல வெற்றித் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் சார்லி. ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சார்லி தனக்கு இந்த பெயரை வைத்தது யார் என்பதை பற்றி பகிர்ந்து கொண்டு உள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால் தமிழ் சினிமாவில் எனக்கு முதன்முதலாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தது கே பாலச்சந்தர் சார் தான். அவர் இயக்கின பொய்க்கால் குதிரை என்ற படத்தில் மூலமா தான் நான் தமிழ் சினிமா உள்ள வந்தேன். அப்போ என் பேரு முழு பெயர் பெருசா இருக்கும். அதனால மனோகர் அப்படிங்கிற பேர்ல தான் என அறிமுகப்படுத்துவதாக இருந்தது. ஆனா பாலச்சந்தர் சார் தான் அது வேண்டாம் அப்படின்னு என்னுடைய பெயரை சார்லி என்று வச்சாரு. எனக்கு இந்த பேர வச்சதே பாலச்சந்தர் சார் தான் என்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் சார்லி.