கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்.. அப்பளம் போல நொறுங்கிய கார்.. அவரின் தற்போதைய நிலை இதுதான்..!!

By admin on ஆவணி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் சம்பத்ராம். கடந்த 1999-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரிலீஸ் ஆன முதல்வன் திரைப்படத்தில் சம்பத் ராம் சப் இன்ஸ்பெக்டராக நடித்து தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

   

இதனை தொடர்ந்து வல்லரசு, உன்னை கொடு என்னை தருவேன், தீனா, ரெட், தவசி, ரமணா, ஆஞ்சநேயா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஜனா, செல்லமே, திருப்பாச்சி, போக்கிரி, வேலாயுதம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் சம்பத் ராம் வில்லனாகவும், வில்லன் கூட்டத்தில் அடியாளாகவும் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

 

வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. எத்தனை மனிதர்கள், ருத்ரவீணை, வேலம்மாள் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். பப்கோவா என்ற ஜி5 வெப் சீரிஸிலும் சம்பத் ராம் நடித்துள்ளார். நேற்று சம்பத்ராம் இரவு சென்னை கிண்டி அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சம்பத் ராமின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயம் அடைந்த சம்பத் ராம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடைசியாக சம்பத்ராம் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படத்தில் மிரட்டல் ஆன நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.