Connect with us

வில்லன் நடிகர் ரகுவரனின் கடைசி ஆசை இதுதான்… ஆனாலும் அது நிறைவேறவில்லை..

CINEMA

வில்லன் நடிகர் ரகுவரனின் கடைசி ஆசை இதுதான்… ஆனாலும் அது நிறைவேறவில்லை..

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோட்டில் பிறந்தவர் ரகுவரன். இவரது முழு பெயர் ரகுவரன் வேலாயுதன் நாயர் என்பதாகும். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த வில்லன் நடிகர் ஆவார். தனித்துவமான நடிப்பு மற்றும் குரல் மூலம் பிரபலமானவர் ரகுவரன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் மொத்தமாக 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரகுவரன்.

   

தனது தந்தை தொழிலுக்காக கேரளாவில் இருந்து கோயம்புத்தூருக்கு குடி பெயர்ந்தது ரகுவரனின் குடும்பம். அங்கு கோயம்புத்தூரில் தனது கல்லூரி படிப்பை முடித்தார் ரகுவரன். 1979 முதல் 1983 வரை சென்னை கிங்ஸ் நடிப்பு நாடக குழுவில் உறுப்பினராக இருந்தார். அந்த குழுவில் நடிகர் நாசரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நேரத்தில் தெலுங்கு கன்னடம் போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் ரகுவரன். பின்னர் சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடிப்பில் டிப்ளமோ முடித்த ரகுவரன் நடிப்பு சார்ந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்பினார். பல கோலிவுட் ஸ்டூடியோவை அணுகி வாய்ப்பு கேட்டார்.

   

ஹரிஹரனின் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரகுவரன். ஆனாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவருடைய நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. சில்க் என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ரகுவரனுக்கு பல புதிய பட வாய்ப்புகள் கிடைத்தது. குற்றவாளிகள், மிஸ்டர் பாரத், மந்திரப்புன்னகை, பூவிழி வாசலிலே, மக்கள் என் பக்கம், ஊர்காவலன், புரியாத புதிர் போன்ற படங்களில் வில்லன் நடிப்பை சிறப்பாக செய்தார் ரகுவரன்.

 

ஆரம்பத்தில் ரகுவரன் ஹீரோவாகவே பல படங்களில் நடித்திருக்கிறார். கவிதை பாட நேரமில்லை, கூட்டுப் புழுக்கள் ஆகிய படங்களில் நடிகராகவும் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் ரகுவரன். இருந்தாலும் வில்லன் கதாபாத்திரங்களே அவருக்கு ஒரு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. பல முன்னணி நடிகர்கள் உடன் படத்தில் நடித்துள்ள ரகுவரன் ரஜினிகாந்துடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். இறுதியாக ரகுவரன் நடித்த திரைப்படம் தனுஷ் நயன்தாரா நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி என்ற திரைப்படம் ஆகும். அந்த திரைப்படத்தில் தனுஷுக்கு தந்தையாக நடித்திருப்பார்.

ரகுவரன் 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2000 ஆம் ஆண்டு ரிஷிவரன் என்ற மகன் பிறந்தார். 2004 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 2008 ஆம் ஆண்டு அதிகப்படியான மது அருந்தியதால் உடல் உறுப்புகள் செயலிழந்து அதன் காரணமாக ரகுவரன் காலமானார். பல நேர்காணலில் கலந்து கொண்டிருக்கும் ரகுவரன் நடிப்பின் மீதான தன்னுடைய அதீத ஆர்வத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். எந்த அளவுக்கு அவர் நடிப்பின் மீது ஒரு பற்று கொண்டிருக்கிறார் என்றால் ஏதாவது ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டார் என்றால் அந்த கதாபாத்திரத்தை போலவே அந்த படம் முடியும் வரையிலும் அதே கதாபாத்திரத்திலேயே வீட்டிலேயும் நடந்து கொள்வாராம் ரகுவரன்.

அந்த அளவுக்கு நடிப்பின் மீது ஒரு பற்றையும் பக்தியும் கொண்டிருக்கிறார் ரகுவரன். ஆனால் நடிப்பையும் தாண்டி ரகுவரனுக்கு ஒரு ஆசை இருந்திருக்கிறது. அது என்னவென்றால் நிறைய ஆடு கோழி மாடு ஆகியவற்றை கொண்டு பண்ணை அமைத்து விவசாயம் செய்து கூலோ கஞ்சியோ குடித்துவிட்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே ரகுவரனின் நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. அது அவர் கடைசி ஆசை என்றும் கூட சொல்லலாம். ஆனால் அது இறுதி வரை நிறைவேறவே இல்லை.

More in CINEMA

To Top