நானும் ரவுடிதான் திரைப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அந்த திரைப்படத்தின் மூன்று வினாடி காட்சிகளை நயன்தாரா தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தியதால் 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு தனுஷை கடுமையாக விமர்சித்து நயன்தாரா ஒரு அறிக்கையும் வெளியிட்டு இருந்த நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்படியான நிலையில் இவர்களின் பிரச்சனை குறித்து வலைப்பேச்சு அந்தணன் பல உண்மைகளை போட்டு உடைத்துள்ளார். அதில், தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனை நீண்ட காலமாகவே இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான். எப்போ விக்னேஷ் சிவன் நயன்தாராவின் வாழ்க்கைக்குள் வந்தாரோ அப்போதிலிருந்து காற்புணர்ச்சியோடு தனுஷ் இருந்தார்.
அதனுடைய வெளிப்பாடு தான் இவர்கள் இருவருக்கும் இடையே இப்போது நடந்து கொண்டிருக்கும் மோதலுக்கு முக்கிய காரணமாகும். அதாவது ஒரு சாதாரணமான அசிஸ்டன்ட் டைரக்டர் மிகப்பெரிய நடிகையை திருமணம் செய்து கொள்வது தனுசுக்கு பிடிக்கவில்லை. அவருக்கு மட்டுமல்ல நயன்தாராவை காதலித்து ஏமாந்து போன பலருக்கும் இது பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தன்னோடு நெருங்கி பழகிய ஒரு நடிகையை திடீரென்று வந்த ஒருவன் தட்டிக் கொண்டு போவதை யாராலயுமே ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஒரு விஷயம் மட்டுமே பிரச்சனைக்கு காரணமாக அமைந்து விட முடியாது. தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது இவர்கள் இருவரும் நடந்து கொண்ட விதம் தனுஷை மிகவும் பாதித்தது.
இதற்காக பழிவாங்குவதற்காக ஒரு சந்தர்ப்பத்தை தனுஷ் எதிர்பார்த்து இருந்தார். அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்ததும் அவர் அதனை பயன்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கவில்லை என்றால் எந்த ஒரு பிரச்சனையும் வந்திருக்காது. ஆனால் நயன்தாரா தன்னுடைய திருமணத்தை விற்று 18 கோடி ரூபாய் வாங்கி இருக்கும்போது தனுஷின் முறையாக சென்று அவர் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யாமல் குறுக்கு வழியில் தனுஷின் மேனேஜரிடம் பேசி அனுமதி வாங்க நினைத்துள்ளார்.
அதற்கு தனுஷ் சம்மதிக்கவில்லை. பிறகு தனுஷை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று நயன்தாரா கேட்ட நிலையில் முதலில் வேண்டாம் என்று கூறிய தனுஷ் பிறகு தொடர்ந்து நயன்தாரா கேட்டதால் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் நயன்தாரா தனுஷை தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து பார்க்க சொன்னதால் கடுப்பான தனுஷ் அந்த வீடியோவுக்கு அனுமதி தர மறுத்து விட்டார். பல நாட்களாகவே தொடர்ந்து புகைந்து கொண்டிருந்த இந்த பிரச்சனையை நயன்தாரா அறிக்கையை வெளியிட்டு தனுஷ் மீது வன்மத்தை கொட்டியுள்ளார்.
தனுஷ் அனுமதி இல்லாமல் அந்தப் படத்தோட கிளிப்பை ஆவணப்படத்தில் பயன்படுத்தியது மிகப்பெரிய தப்பு. அதுக்கு தனுஷ் 3 கோடி ரூபாய் கேட்டதில் தப்பு கிடையாது. நயன்தாராவை விக்னேஷ் சிவன் கல்யாணம் பண்ண அதனால தனுசுக்கு மிகப்பெரிய வருத்தம் இருக்கு. இன்னைக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவுக்கு முக்கிய காரணமே நயன்தாரா என்று தான் சொல்ல வேண்டும். அதுதான் இன்று தனுஷின் குடும்பத்தில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது. மேலும் நயன்தாரா மற்றும் தனுஷ் மோதலுக்கு காரணம் பணம் மட்டும் பிரச்சனை கிடையாது நயன்தாராவின் தலைகனம் தான் காரணம் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.