தமிழ் சினிமாவை பொருத்தவரையில் ஒரு நகைச்சுவையோடு கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் தான் சுந்தர் சி. இவர் முதன்முதலாக முறைமாமன் என்ற திரைப்படம் மூலமாக தான் இயக்குனராக அறிமுகமானார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்து பிறகு இயக்குனராக உருவெடுத்தார். தான் இயக்கிய முதல் படம் இவருக்கு வாழ்க்கையையும் கொடுத்தது என்று கூறலாம். அதாவது அந்த திரைப்படத்தில் தான் குஷ்புவின் அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது. தொடக்கத்தில் இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்த நிலையில் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
முறைமாமன் திரைப்படம் இவருக்கு வரவேற்பை கொடுத்தாலும் இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தற்போதும் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கார்த்தியின் நடிப்பு மற்றும் கவுண்டமணி செந்தில் காமெடி என படம் முழுக்க நகைச்சுவையை சொட்ட சொட்ட சுந்தர் சி வைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் முதலில் ஹீரோயினியை தேடுவதற்குள் ஒரு பாடு பட்டு விட்டதாக தயாரிப்பாளர் பாலகோபி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
நிறைய நடிகைகளை பார்த்தும் யாருக்கும் திருப்தி இல்லாததால் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன சுந்தர் சி யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு வாங்க போட்டு கதையை ஆரம்பிக்கலாம் என்ற மனநிலைக்கு வந்துள்ளார். ரம்பா நடித்த கேரக்டருக்கு முதலில் நக்மா தான் பேசப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் அந்த சமயத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் அவர் சம்பளமாக கேட்டுள்ளார். அதுவும் கொடுத்து விடலாம் என்று சமாதித்த நிலையில் ஒரு கட்டத்தில் அவரால் படத்தில் நடிக்க முடியாமல் போக மறுத்துவிட்டார்.
அதன் பிறகு ரஞ்சிதா, மதுபாலா, சங்கவி மற்றும் ரோஜா என அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகைகள் பேசப்பட்டனர். ஆனால் அவர்கள் அப்போது மிகவும் பிசியாக இருந்ததால் கால் சூட் கிடைக்கவில்லை. பிறகு சுந்தர் சி அந்த உழவன் படத்துல நடிச்சிருக்கு பாருங்க அதையே நடிக்க வைக்கலாம் என்று ரம்பாவை பரிந்துரைத்தார். ரம்பா அப்போது உழவன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் பிறகு உள்ளதை அள்ளித்தா படத்தில் அவரை நடிக்க வைத்தனர். அந்தப் படத்திற்குப் பிறகு ரம்பா இந்த தமிழ் சினிமாவையே தன்னுடைய கைக்குள் மடக்கி போட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படித்தான் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் அமைந்தது என்று தயாரிப்பாளர் பாலகோபி கூறியுள்ளார்.