food

40 வயதை கடந்துவிட்டீர்களா…? நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வாங்க…

By admin on கார்த்திகை 23, 2024

Spread the love

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் பலவித நோய்கள் இளம் வயது மரணங்கள் பல நடக்கின்றன. அதற்கு முக்கியமான காரணம் உணவு கட்டுப்பாட்டின்மை தான். எதற்கெடுத்தாலும் பாஸ்ட் புட்களை தேடி தான் மக்கள் ஓடுகிறார்கள். இளம் தலைமுறையினரும் பாஸ்ட் புட் கடைகளை தேடி தேடி சாப்பிடுகிறார்கள். அதுதான் ட்ரெண்ட் என்பது போல் நினைக்கிறார்கள். ஆனால் அது உடம்பில் ஏற்படுத்தும் தீங்கு சொல்ல முடியாத அளவு இருக்கிறது.

   

முந்தைய காலகட்டத்தில் 60 வயது தாண்டி விட்டால் கவனமாக இருங்கள் என்பார்கள். பின்னர் 50 வயதானது இப்போது 40 வயதை கடந்து விட்டாலே உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாக சரியாக இருந்தால் தான் எந்த ஒரு நோய் பாதிப்பின்றி நீண்ட ஆயுளோடு இருக்க முடியும். அப்படியே 40 வயதை நீங்கள் கடந்துவிட்டால் உணவு விஷயத்தில் என்னவெல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இனி காண்போம்.

   

உங்களுக்கு 40 வயது கடந்துவிட்டால் அதிகப்படியான உப்பு சத்து நிறைந்த உணவுகளையும் அதிகப்படியான இனிப்புகளையும் சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த காலத்தில் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருகிறது. அதிகப்படியாக பொரித்த உணவுகளை சாப்பிடுவது இரவு நேரங்களில் மிக கொழுப்புடைய செரிமானத்துக்கு அதிக நேரம் எடுக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவதை தவிருங்கள். லேசான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

 

முக்கியமாக 40 வயதை கடந்து விட்டால் புகை மது பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைவிடுவதற்கு முயற்சி செய்யுங்கள். இது அதிகப்படியான தீங்குகளை விளைவிக்கும். அதுபோல பழங்கள் காய்கறிகள் சிறுதானியங்கள் என சத்தான உணவுகளை சாப்பிடுவதற்கு தொடங்குங்கள். ஏனென்றால் இப்போதே உடம்பை பேண ஆரம்பித்தால் தான் கொஞ்சம் வயது முதிர்ந் போது நம் உடம்பில் தெம்பு இருக்கும்.

உங்களுக்கென சாப்பிடுவதற்கான சரியான நேரம் தூங்குவதற்கான நேரம் என கரெக்டாக பிரித்து வைத்து அதன்படியே பின்பற்றுங்கள். இன்றைய காலத்து பாஸ்ட் புட் மோகத்தினால் ஈர்க்காமல் மற்ற எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல் நம் உடம்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நம் உடம்பு என்ன சொல்கிறது அதற்கு என்ன தேவை நாம் எப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நினைப்போடு உடம்பை பாதுகாத்தால் நோய் நொடி இன்றி வாழலாம்.