ஆஹா இது தான்டா நட்பு.. தனக்கு ரொம்ப பிடித்த விஷயத்தை பாடகி லதா மங்கேஷ்கருக்காக கைவிட்ட சிவாஜி..!

By Soundarya on கார்த்திகை 23, 2024

Spread the love

சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் பிரபலமான புகழ் பெற்ற நடிகராவார். இவரின் முழு பெயர் விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்பதாகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சிவாஜியின் நடிப்பு திறமையை பார்த்த தயாரிப்பாளர் பி ஏ பெருமாள் முதலியார் பல எதிர்ப்பை தாண்டி இவரை பராசக்தி திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

#image_title

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிவாஜி கணேசன் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரின் திறமையை பார்த்து வியந்த மக்கள் இவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று அழைத்தனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து பிரபலமானார் சிவாஜி கணேசன். இவர் தனது வாழ்நாளில் 288 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

   
   

#image_title

 

அதில் தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான். நல்ல குரல் வளம் தெளிவான உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு சிறப்பு நடிப்புத் திறன் ஆகியவை இவரின் தனி சிறப்புகள் ஆகும். இவரை நடிகர் திலகம் நடிப்பு சக்கரவர்த்தி சிம்ம குரலோன் என பல பெயர்களில் மக்கள் அழைக்கிறார்கள். சரித்திரம் புராணம் குடும்பம் சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன். இவரை தமிழ் சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என்று அழைத்தனர்.

actor sivaji ganesan build out house for lata mankeshkar | "பாசமலர்" லதா மங்கேஷ்கருக்காக 2 மாதத்தில் வீடு கட்டிய "நடிகர் திலகம்" சிவாஜி...!

சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒருநாள் லதா மங்கேஸ்கர் சிவாஜியின் வீட்டிற்கு சாப்பிட வந்தாராம். அப்போது சிவாஜியின் வீட்டில் குயில் இருந்ததாம். இது எதற்காக அண்ணா வைத்துள்ளீர்கள் என்று லதா மங்கேஸ்கர் கேட்டுள்ளார். அதற்கு சிவாஜி சமைப்பதற்காக தான் என்று சொன்னதும் லதா கண்ணீர் விட்டு அழுதுவிட்டாராம். வேண்டாம் விட்டுவிடுங்கள் அது பாவம், என்னையும் குயில் என்று தான் அழைப்பார்கள் என்று சொன்னதும் சிவாஜி அதை விட்டுவிட்டாராம். அன்றிலிருந்து சிவாஜியும் குயில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டாராம்.