தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, தனது கணவர் ஹரி பிரசாத்தால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘வைஷு அம்மா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த வைஷ்ணவியும், ஹரி பிரசாத்தும் காதலித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் திருமணத்திற்குப் பிறகு வைஷ்ணவியின் வீட்டிலேயே தங்கியிருந்த இந்தத் தம்பதியினர், சமூக வலைதளங்களுக்காக இணைந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக வைஷ்ணவி செய்த ஒரு ‘பிராங்க்’ வீடியோ, இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், ஹரி பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வைஷ்ணவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டுத் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். வைஷ்ணவி தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும், கடந்த மார்ச் 17-ஆம் தேதி இரவு மீண்டும் வரதட்சணை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹரி பிரசாத், வைஷ்ணவியைக் கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் கொலை செய்த பின் அதிகாலை வரை அதே அறையில் இருந்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல தப்பிச் சென்ற ஹரி பிரசாத்தை காவல்துறையினர் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர். ஒரு விளையாட்டான வீடியோ மற்றும் வரதட்சணை ஆசை ஒரு இளம் பெண்ணின் உயிரையும், கருவில் இருந்த உயிரையும் பறித்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…