Categories: சினிமா

எழுத மாட்டேன் என்று சொன்னார் வைரமுத்து… அந்த பாடலுக்குதான் தேசிய விருது கிடைத்தது… ஓப்பனாக சொன்ன இசையமைப்பாளர்!

Spread the love

1980 ஆம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் அறிமுகம் ஆனவர் வைரமுத்து. அப்போது இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.

அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.

ஆனாலும் ரஹ்மானின் வருகைக்குப் பிறகு வைரமுத்து தனது செகண்ட் இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கி இப்போது வரை முன்னணி பாடல் ஆசிரியராக இருக்கிறார். ஆனால் அவர் இத்தனை ஆண்டுகள் சேர்த்து வைத்த புகழை அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒரே நாளில் வீழ்த்திவிட்டன. முதலில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டை வைத்தவர் பாடகி சின்மயிதான். அவர் தொடர்ந்து வைரமுத்துவின் அத்துமீறல்களைப் பட்டியலிட்டு அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லிவந்தார். இதனால் வைரமுத்து சினிமாவில் பாடல்கள் எழுதும் வாய்ப்புகளை இழந்துள்ளார்.

இந்திய சினிமாவிலேயே பாடல்களுக்காக அதிக தேசிய விருதைப் பெற்றிருப்பவர் வைரமுத்துதான். மொத்தம் 7 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அப்படி அவர் தேசிய விருது பெற்ற படங்களில் ஒன்றுதான் தென்மேற்குப் பருவக்காற்று. அந்த படத்தில் இடம்பெற்ற ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்ற பாடலுக்காக தேசிய விருது கிடைத்தது.

இதுபற்றி அந்த படத்தின் இசையமைப்பாளர் ரகுநந்தன் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நாங்கள் தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்கு மெட்டமைத்து அதற்காக பாடல்கள் வாங்க வைரமுத்து அவர்களிடம் சென்றபோது எங்களைப் பார்க்க மறுத்துவிட்டார்கள். அப்போது வைரமுத்து சார் ரஹ்மான் போன்ற பெரிய இசையமைப்பாளர்களுக்கு மட்டும்தான் பாடல் எழுதி வந்தார்.

ஆனால் நாங்கள் காத்திருந்து கெஞ்சி அவரை சம்மதிக்க வைத்தோம். ஒரு வாரம் கழித்து அவர் அனைத்துப் பாடல்களையும் எழுதித் தந்தார். அப்படி அவர் எழுதிய பாடலுக்குதான் தேசிய விருது கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

2 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

2 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

2 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

2 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

3 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

3 மணத்தியாலங்கள் ago