Categories: சினிமா

படம் வெளியான முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்தியாவின் டாப் 10 படங்கள்… சரித்திரம் படைத்த புஷ்பா 2…

Spread the love

ஒவ்வொரு இயக்குனர்களும் நடிகர்களும் ஒரு படத்தை ஈடுபாடு உடன் உருவாக்கி தான் வெளியிடுகிறார்கள். ஆனால் ஒரு படம் வெற்றி அடைவதும் தோல்வி அடைவதும் மக்கள் கையிலும் இருக்கிறது. அப்படி படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் வசூல் சாதனை செய்த இந்தியாவின் டாப் 10 படங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.

1. ஜவான்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதி தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படம் வெளியான முதல் முதலிலேயே 129 கோடி வசூல் செய்து இருக்கிறது.

2. ஆதிபுருஷ்

ஓம்ராவத் இயக்கத்தில் பிரபாஸ் சைப் அலி கான் கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் தான் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 136 கோடி வசூலித்து இருக்கிறது.

3. லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் திரிஷா அர்ஜுன் ஜனனி ஆகியோர் நடித்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 142 கோடி வசூலித்து இருக்கிறது.

4. தேவரா 1

கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் சைப் லி கான் ஜான்விகபூர் பிரகாஷ்ராஜ் ஸ்ரீகாந்த் நடித்த திரைப்படம் தேவாரா பாகம் ஒன்று. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 145 கோடி வசூலித்து இருக்கிறது.

5. KGF 2

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஸ்ரீநிதி செட்டி சஞ்சய் தாகூர் நடித்த திரைப்படம் கே ஜி எஃப் 2 இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 162 கோடி வசூலித்து இருக்கிறது.

6. சலார்

பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த அதிரடி திரில்லர் திரைப்படம் சலார். இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 165 கோடி வசூலித்து இருக்கிறது.

7. கல்கி 2898 AD

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் அமிதாபச்சன் கமல்ஹாசன் தீபிகா படுகோன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் கல்கி. இது சாகசங்கள் நிறைந்த ஒரு படமாகும். இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 182 கோடி வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.

8. பாகுபலி 2

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் சத்யராஜ் அனுஷ்கா செட்டி நடித்த திரைப்படம் தான் பாகுபலி 2. இதன் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இரண்டாம் பாகம் அதைவிட நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த பாகுபலி 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் 214 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

9. RRR

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் ஆலியா பட் அஜய் தேவ்கன் போன்றோர் நடித்த திரைப்படம் ஆர் ஆர் ஆர். ந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 223 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

10. புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா 2 .இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய சினிமாவில் சரித்திரம் படைக்கும் விதமாக வெளியான முதல் நாளே 294 கோடி வசூலித்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது புஷ்பா 2.

admin

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

41 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

1 மணத்தியாலம் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago